#Breaking: தமிழகம் காணாத பெரும் விபத்து! 8 கார், 4 லாரி, 1 பேருந்து அடுத்தடுத்து மோதி விபத்து! மீட்பு பணி தீவிரம்! - Seithipunal
Seithipunal


கிருஷ்ணகிரி அருகே தேசிய நெடுஞ்சாலைகள் அடுத்தடுத்து 13 வாகனங்கள் மோதி பெரும் விபத்து நிகழ்ந்துள்ளது. 

முதல் கட்ட தகவலின் படி பத்து பேர் இந்த விபத்தில் படுகாயம் அடைந்துள்ளதாகவும் மீட்பு பணிகள் தீவிர படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் அடுத்த பேரண்டப்பள்ளி தேசிய நெடுஞ்சாலையில் 8 கார்கள், 4 லாரிகள், ஒரு பேருந்து மோதிக்கொண்டன.

இந்தக் கொடூர விபத்தில் 10 பேர் படுகாயம் விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தப் பெரும் விபத்து காரணமாக தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. 

விபத்துக்குள்ளான வாகனங்களை சாலையிலிருந்து அப்புறப்படுத்த பணிகளும் தீவிர படுத்தப்பட்டுள்ளன. 

சம்பவ இடத்திற்கு தீயணைப்பு துறையினர் போலீசார் மருத்துவ குழு விரைந்துள்ளதாக தகவல்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Krishnagiri 13 vehicle Chain accident near Hosur


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->