விநாயகர் சதுர்த்தி விழா - திருச்சி உச்சிப்பிள்ளையார் கோவிலில் தயாராகும் ராட்சத கொழுக்கட்டை.!! - Seithipunal
Seithipunal


தென் கைலாயம் என்று போற்றப்படும் திருச்சி மலைக்கோட்டை கோவிலில் அடிவாரத்தில் மாணிக்க விநாயகர், மலையின் உச்சியில் உச்சிப்பிள்ளையார், மலையின் நடுப்பகுதியில் தாயுமானசுவாமி, மட்டுவார் குழலம்மையும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.

இந்த மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும். அதன் படி இந்த ஆண்டுக்கான விழா நாளை நடைபெறவுள்ளது. இந்த விழாவை முன்னிட்டு நாளை காலை 4.30 மணிக்கு கணபதி ஹோமும், 7 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் தாயுமான சுவாமி கோவில் மடப்பள்ளியில் தயாரிக்கப்பட்ட 150 கிலோவிலான ராட்சத கொழுக்கட்டையை தொட்டில் கட்டி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார், மாணிக்க விநாயகருக்கு தலா 75 கிலோவில் படையலிட்டு நைவேத்தியம் செய்யப்படவுள்ளது.

இந்த நிலையில், இந்த விழாவிற்காக 150 கிலோவில் ராட்சத கொழுக்கட்டை தயாரிக்கும் பணி நேற்று முதல் தொடங்கியது. இந்த கொழுக்கட்டையை 24 மணி நேரம் நீராவியில் வேக வைத்து தயாரிப்பார்கள். இதற்காக தேங்காய், பச்சரிசி மாவு, உருண்டை வெல்லம், ஏலக்காய், நெய், பருப்பு உள்ளிட்ட பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

kozhukattai work start in trichy uchchipillaiyar temple for vinayagar chathurthi


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->