கோவையில் ரௌடியை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த போலீசார்! அதிரவைக்கும் பின்னணி!
Kovai Rowdy police gun fire
கோவையில் போலீசாரை தாக்க முயன்ற ரௌடியை போலீஸார் துப்பாக்கிச் சூட்டில் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த சக்திவேல், செரையாம்பாளையம் அருகே உள்ள ஒரு மதுக்கூடத்தில் செவ்வாய்க்கிழமை மது அருந்தி வந்தார். அதே இடத்தில் கோவை சரவணம்பட்டியைச் சேர்ந்த ஹரிஸ்ரீ (23) என்பவரும் மது அருந்தியிருந்தார்.
மதுவைத் தொடர்ந்து இருவருக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. கோபத்தில் ஹரிஸ்ரீ, தான் வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியை கொண்டு வானத்தில் சுட்டு சக்திவேலை மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து சக்திவேல் அளித்த புகாரின் பேரில், கோவில்பாளையம் போலீஸார் ஹரிஸ்ரீயை கைது செய்தனர். அவரது துப்பாக்கியை பறிமுதல் செய்ய அழைத்துச் சென்றபோது, போலீசாரிடம் இருந்து தப்பிக்க முயன்ற ஹரிஸ்ரீ, துப்பாக்கியால் சுட முயன்றதாக கூறப்படுகிறது.
தற்காப்புக்காக ஆய்வாளர் இளங்கோ, ஹரிஸ்ரீயின் காலில் துப்பாக்கியால் சுட அவர் காயமடைந்தார்.
காயமடைந்த ஹரிஸ்ரீ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர். மேலும், ஹரிஸ்ரீ மீது ஆயுத தடை சட்டம் உட்பட பல வழக்குகள் பதியப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
English Summary
Kovai Rowdy police gun fire