1500 ரூபாய்.., வசமாக சிக்கிய கோவை மார்டன் மாமி!  - Seithipunal
Seithipunal


கோவையில் 1200 ரூபாய் முதலீடு செய்தால் 20 நாட்களில் 1500 ரூபாய் திருப்பித் தருவதாக விளம்பரம் செய்து, மோசடி செய்த பிரபல யூ-டியூப் சேனல் "மாடர்ன் மாமி"யை சேர்ந்த மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவையைச் சேர்ந்த ஹேமலதா என்பவர் "மார்டன் மாமி" என்ற பெயரில் யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார்.

இவரின் யூ-டியூப்சேனலை பின்பற்றும் நபர்களிடம் 1200 ரூபாய் நீங்கள் முதலில் முதலீடு செய்தால், 20 நாட்களில் 1500 ரூபாய் தருவதாக கோரி விளம்பரம் செய்துள்ளார்.

ஆகா! இருபதே நாளில் 300 ரூபாய் லாபம் கிடைக்கிறதே என்ற பேராசையில், அவரை பின் தொடர்பவர்கள் பலரும் முதலீடு செய்துள்ளனர்.

ஆனால், முதலீடு செய்தவர்களுக்கு 20 நாட்களில் 1500 ரூபாய் தராமல் பிரேமலதா ஏமாற்றி உள்ளார். இதில் பணத்தை இழந்த ரமா என்ற நபர் கோவை பொருளாதார குற்றவியல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், மாடர்ன் மாமி யூ-டியூப் சேனலை சேர்ந்த பிரேமலதா உள்ளிட்ட மூன்று பேரை கைது செய்தனர்.

மேலும், அவர்களிடமிருந்து 45 சவரன் நகை, இரண்டு கிலோ வெள்ளி, ஏழு செல் போன், 10,000 ரூபாய் ரொக்கம் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kovai Modern mami arrested


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->