#தூத்துக்குடி : கோரம்பள்ளம் குளத்தின் கரை உடைந்த காணொளி வைரல்!
Korampallam pond breaking video has gone viral
தென் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கடந்து 2 நாட்களாக அதி கன மழை கொட்டி தீர்த்து வரும் நிலையில் அனைத்து நீர் நிலைகளும் நிரம்பி வழிகிறது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த அதி கனமழை காரணமாக கோரம்பள்ளம் குளத்தில் நீர் நிரம்பி கரை உடைப்பு ஏற்பட்டு ஊருக்குள் வெள்ளம் புகுந்துள்ளதால் பொது மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தின் பெரிய குளமான கோரம்பள்ளம் குளத்தின் உடைந்து தூத்துக்குடி மாநகருக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது. கோரம்பள்ளம் குளம் உடைந்து வெளியேறும் நீர் சாலையை மூழ்கடித்தபடி செல்வதால் பல்வேறு பகுதிகள் துண்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் தவித்து வருகின்றனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
English Summary
Korampallam pond breaking video has gone viral