5 வருட முகநூல் காதல்…! காதலனை தேடி வந்த இளம்பெண் சடலமாக மீட்பு…! கிருஷ்ணகிரியில் நேர்ந்த சோகம்….! - Seithipunal
Seithipunal


சமூகவலைதளங்களில் காதலித்து மணம் செய்வது தற்போதுள்ள சூழ்நிலையில் இயல்பான ஒன்றாய் பார்க்கப்படுகிறது. தமிழகத்தின் ஒரு மூலையில் உள்ள ஒருவர் அமெரிக்காவில் உள்ள ஒருவருவரை காதலித்து கரம் பிடிக்கும் நிகழ்வுகளும் அரங்கேறுகின்றன. இப்படி ஒரு புறம் இருக்கவே சமூக வலைதளங்களின் இருண்ட பக்கங்கள் நம்மை அதிர்ச்சியடைய வைக்கின்றன. கிருஷ்ணகிரி அருகே முகநூல் காதலரை தேடி வந்த இளம்பெண் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்படுள்ளார். 

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் ரஞ்சனி. இவர் முகநூல் வழியாக கிருஷ்ணகிரி மாவட்டம், வேலம்பட்டி பகுதியை சேர்ந்த சூர்யா என்பவரை 5 வருடங்களாக காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், சூர்யா கேரளாவிற்கு சென்று ரஞ்சனியை சந்தித்துள்ளார். அப்போது அவர் ரஞ்சனியிடன் இருந்து பணம், நகைகளை வாங்கியுள்ளார். 

அதன் பிறகு சூர்யா ரஞ்சனியின் தொடர்பை துண்டித்தாக தெரியவருகிறது. இதனால் சூர்யாவை தேடி ரஞ்சனி அவர் ஊருக்கு சென்றுள்ளார். அப்போது அவருக்கு ஏற்கனவே திருமணமானது  தெரியவரவே அதிர்ச்சியடைந்த ரஞ்சனி சொந்த ஊருக்கு திரும்பாமல் அங்குள்ள சூப்பர் மார்கெட் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். 

இந்நிலையில், காவாப்பட்டி அடுத்த மேல்கொட்டாய் பகுதியில் முகம் எரிக்கப்பட்ட நிலையில் இளம்பெண் சடலம் ஒன்று கிடந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதில் அந்த பெண் சடலம் ரஞ்சனி என்பது தெரியவந்துள்ளது.

அவர் தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டரா? அந்த சடலம் எப்படி அங்கு வந்தது? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நேரில் பழகியவர்களையே நம்ப முடியாத இந்த சூழலில் முகநூல் காதலரை தேடி வந்த பெண் சடலமாக மீட்கப்பட்டது அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Kerala Native Girl Found Died body at Tamilnadu Krishnagiri Police Investigation


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->