காசிமேடு மீனவர்கள் சார்பில் வரும் 10-ஆம் தேதி ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டம்..! - Seithipunal
Seithipunal


எதிர்வரும் 10-ஆம் தேதி காலை 10 மணிக்கு சென்னை மாவட்ட ஆட்​சி​யர் அலு​வல​கம் அரு​கில் காசிமேடு மீன்​பிடி துறை​முக அனைத்து விசைப்​படகு மீனவர் சங்க சார்​பில் ஒருநாள் அடை​யாள வேலை நிறுத்​த​மும், ஆர்ப்​பாட்​டம் நடை​பெறும் என்று அதன் ஒருங்​கிணைப்​பாளர் விஜேஷ் கூறியுள்ளார்.

இது குறித்து விஜேஷ் மேலும் கூறியுள்ளதாவது; சென்​னை, திரு​வள்​ளூர் மாவட்ட விசைப்​படகு​களை ஆந்​திர அரசு சிறை பிடித்து விடுவிக்​க​வில்​லை. இதன் காரணமாக,  தமிழக அரசு மற்​றும் மீனவர்​களின் கோரிக்​கைகளை ஏற்க மறுப்​ப​தால், ஆந்​திர மாநில கடல் உணவு​கள், பிற மீன் வகைகளுக்கு தமிழகத்​தில் தடை விதிக்க வேண்​டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், புதுச்​சேரி, காரைக்​கால் யூனியன் பிரதேச விசைப்​படகு​கள் அதிககுதிரை திறன் கொண்ட இன்​ஜின் பொருத்​தி, தொடர்ந்து ஆந்​திர, தமிழக கடலோர பகு​தி​களில் அத்​து​மீறி மீன் பிடிப்​ப​தால் ஆந்​திரா, தமிழக மீனவர்​களின் வாழ்​வா​தா​ரம் பாதிக்​கப்​படு​கிறதாகவும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இது தொடர்​பாக முதல்​வர் விஜய், புதுச்​சேரி மாநில அரசுடன் பேசி அதிக குதிரை திறன் கொண்ட இன்​ஜின்​களை பயன்​படுத்த தடை விதிக்க வேண்​டும் போன்ற ​கோரிக்​கைகளை வலி​யுறுத்தி வரும் 10-ஆம் தேதி காலை 10 மணிக்கு சென்னை மாவட்ட ஆட்​சி​யர் அலு​வல​கம் அரு​கில் ஆர்ப்​பாட்​டம் நடை​பெறும் என்றும், அன்றைய தினம் ஒருநாள் அடை​யாள வேலை நிறுத்​த​மும் நடை​பெறும் என்றும் அறிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Kasimedu fishermen to hold one day symbolic strike and protest on the 10th


கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...



Advertisement

கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...




Seithipunal
--> -->