இரவில் பிரேத பரிசோதனை செய்ய மத்திய அரசு அனுமதி... தமிழக அரசு தரப்பில் விளக்கம்! - Seithipunal
Seithipunal


கரூரில் தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில் நடைபெற்ற விஜய் பிரசாரக் கூட்ட நெரிசலில் 10 குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்த சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பேரதிர்ச்சிக்கு பின், உயிரிழந்தோரின் உடல்களுக்கு இரவோடு இரவாக பிரேத பரிசோதனை நடத்தப்பட்டதை குறித்து சமூக வலைத்தளங்களில் கேள்விகள் எழுந்தன. பகலில்தான் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும், இரவில் செய்யக்கூடாது என விதிமுறைகள் உள்ளன என்ற குற்றச்சாட்டுகளை த.வெ.க. ஆதரவாளர்கள் முன்வைத்தனர்.

இதற்கு தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் வழங்கியது. எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், 2021 நவம்பர் 15 அன்று ஒன்றிய சுகாதாரத்துறை வெளியிட்ட அலுவலக குறிப்பை சுட்டிக்காட்டி, மருத்துவமனையில் தேவையான வசதிகள் இருந்தால் இரவிலும் பிரேத பரிசோதனை செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு பிரச்சனை அல்லது அவசரநிலை ஏற்பட்டால் இரவு நேர பரிசோதனைக்கு தடையில்லை என்றும் அந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

எனவே, இரவில் பிரேத பரிசோதனை செய்யக்கூடாது என்ற சமூக வலைத்தளக் கூற்றுகள் தவறானவை என்று அரசின் தகவல் சரிபார்ப்பகம் தெளிவுபடுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Karur Stampede post mortem  TVK Vijay


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->