கரூர் கூட்ட நெரிசல்..சிகிச்சை பெறுபவர்களை சந்தித்து ஆறுதல் கூறி ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழகம்!  - Seithipunal
Seithipunal


கரூர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை சந்தித்து நலம் விசாரித்த ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநில நிர்வாகிகள் சந்தித்து ஆறுதல் கூறினர்.

கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் நேற்று முன்தினம் பிரசாரம் மேற்கொண்டபோது  கூட்டம் கலைந்து செல்லும்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டதில் 50-க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்தனர். அவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த கூட்ட நெரிசல் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்து உள்ளனர்.ஒற்றைப்படை எண்ணிக்கையில் தொடங்கிய பலி எண்ணிக்கை, படிப்படியாக அதிகரித்து, 41 ஆக உயர்ந்துள்ளது. 

இந்தநிலையில் ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் அண்ணன் செ. ஹைதர் அலி அவர்கள் உத்திரவிட்டதை அடுத்து, மாநில செயலாளர் சகோதரர் M. H. சிக்கந்தர் அவர்கள் தலைமையில், மாநில செயலாளர்கள் திண்டுக்கல் ஜமால் முகமது, பொறியாளர் பக்ருதீன் அலி அகமத், ஆகியோர், தவெக தலைவர் விஜய் அவர்களின் கரூர் பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி மரணமடைந்தவர்களின் குடும்பத்தினர்களை சந்தித்து ஆறுதல் கூறினர். மேலும் படுகாயங்களுடன், கரூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து நலம் விசாரித்ததுடன், அவர்கள் அனைவரும் விரைந்து நலம்பெற பிரார்த்தனை செய்தனர். பணியில் இருந்த மருத்துவர்களிடம் சிகிச்சை பெறுபவர்களின் உடல் நலம் குறித்து கேட்டு அறிந்ததுடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிறப்பான சிகிச்சை தரவேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர். இனியொரு சம்பவம் இதுபோல் நடக்காதவாறு அரசும், மக்களும், கட்சிகளும் பொறுப்பேற்க வேண்டும் என ஊடகங்கள் வாயிலாக கோரிக்கை வைத்தனர். உடன் திண்டுக்கல், மதுரை மாவட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Karur crowded junction United Muslim Progressive Association meets patients and offers comfort


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->