அர்ஜென்டினாவில் கொடூரம்! Instagram Live-இல் 3 இளம் பெண்கள் சித்ரவதை செய்து கொலை...!- பெரும்போராட்டம் - Seithipunal
Seithipunal


அர்ஜென்டினா, பியூனஸ் அயர்ஸ் நகர புறநகர்ப் பகுதியில் நடந்த கொடூர சம்பவம் உலகையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கடந்த 19-ம் தேதி, பிரெண்டா டெல் காஸ்டிலோ (20), மோரேனா வெர்டி (20) மற்றும் லாரா குட்டிரெஸ் (15) ஆகிய மூவரையும் "விருந்திற்கு அழைத்துச் செல்வதாக" தெரிவித்து போதைப்பொருள் கும்பல் கடத்திச் சென்றது.

இதைத்தொடர்ந்து,அவர்கள் மூவரும் கொடூரமாக சித்ரவதை செய்து கொலை செய்யப்பட்டனர். அதுமட்டுமின்றி, பெரு நாட்டைச் சேர்ந்த போதைப்பொருள் கும்பல் தலைவன், இந்த அச்சுறுத்தும் செயலை Instagram Live-இல் ஒளிபரப்பி, “போதைப் பொருட்களை திருடினால் இதுவே கதி” என்று எச்சரிக்கை விடுத்தான்.

இதையடுத்து நாட்களுக்குப் பிறகு, 3 இளம் பெண்களின் உடல்கள் புதைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டன. இந்த சம்பவத்தில் தொடர்புடைய 3 ஆண்கள், 2 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் முக்கிய குற்றவாளியான கும்பல் தலைவன் இன்னும் தப்பிச்சென்று காவலர்கள் தீவிரமாக தேடிவருகின்றனர்.

இந்த படுகொலையால் சோகமும், கோபமும் சூழ்ந்த அர்ஜென்டினாவில், ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் திரண்டு, “பெண்களுக்கு நீதி வேண்டும் . பாலின அடிப்படையிலான வன்முறையை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கோஷமிட்டனர்.

மேலும்,பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினரும் போராட்டத்தில் இணைந்து நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக சென்றனர்.இந்த சம்பவம், அர்ஜென்டினா மட்டுமல்லாது, உலகம் முழுவதும் பெண்கள் பாதுகாப்பு குறித்து கேள்விகள் எழுப்பியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Cruelty in Argentina 3 young women tortured and murdered on Instagram Live Great Struggle


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->