சதி வலை! காவலர்களின் தவறால் பெரும் சோகம்..!- த.வெ.க. வக்கீல் அதிரடி குற்றச்சாட்டு
Conspiracy web Great tragedy due mistake police tvk Lawyer makes dramatic accusation
கரூரில் நடைபெற்ற த.வெ.க. தலைவர் விஜய் பிரசார நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவம், தமிழகமெங்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து குறித்து சிபிஐ விசாரணை அவசியம் என வலியுறுத்தி, த.வெ.க. வக்கீல் பிரிவு மதுரை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்ய முனைந்துள்ளது.

மதுரையில் நிருபர்களிடம் பேசிய த.வெ.க. வக்கீல் அறிவழகன், “பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய காவல்துறை முழுமையாக தவறிவிட்டது. விஜய் கூட்டத்தில் தடியடி நடத்தியதே உயிரிழப்புக்குக் காரணம். இதை மறைக்க தடயங்களை அழிக்கும் முயற்சிகள் நடக்கின்றன. மர்ம நபர்கள் கூட்டத்தில் கல்வீச்சு, செருப்பு வீச்சு செய்து கலவரம் தூண்டினர்.
இது திட்டமிட்ட சதி, அதில் காவல்துறையினரும் உடந்தை” என குற்றம்சாட்டினார்.அவர் மேலும், “உயிரிழந்தோரின் உடல்களுக்கு இரவு நேரத்தில் சட்டவிரோதமாக பிரேத பரிசோதனை நடத்தியதன் பின்னணியும் சந்தேகம் தருகிறது.
முன்கூட்டியே அவசர ஊர்திகள் நிறுத்தப்பட்டிருந்தது கூட சதி திட்டத்திற்கான சான்று. போதுமான காவல் ஏற்பாடுகள் செய்யாததும் இந்த பெரும் விபத்துக்கு காரணமாகியது.
எனவே, சிபிஐ விசாரணை மூலமே உண்மை வெளிச்சம் பார்க்கும்” என்றார்.மேலும்,கட்சியின் நிர்வாகி 'ஆதவ் அர்ஜுனா' சார்பில் இந்த மனு தாக்கல் செய்யப்படுவதாகவும், நீதிமன்றத்தில் வாதாடி சம்பவத்திற்குப் பொறுப்பானவர்களை வெளிக்கொணருவோம் என்றும் அறிவழகன் உறுதியளித்தார்.
English Summary
Conspiracy web Great tragedy due mistake police tvk Lawyer makes dramatic accusation