கரூர் கூட்ட நெரிசல்: தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் கைது?
Karur stampedeTavek General Secretary Anand arrested?
கரூர் நெரிசல் தொடர்பாக வழக்குப்பதிவான நிலையில் தவெக பொதுச்செயலாளர் ஆனந்த், கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன், நிர்மல்குமார் ஆகியோர் விசாரணைக்கு வராவிட்டால் 3 பேரையும் கைது செய்து விசாரிக்க காவல்துறையினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் நேற்று முன்தினம் பிரசாரம் மேற்கொண்டபோது கூட்டம் கலைந்து செல்லும்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டதில் 50-க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்தனர். அவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த கூட்ட நெரிசல் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்து உள்ளனர்.ஒற்றைப்படை எண்ணிக்கையில் தொடங்கிய பலி எண்ணிக்கை, படிப்படியாக அதிகரித்து, 41 ஆக உயர்ந்துள்ளது. இந்த துயரத்துக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்ததோடு, உயிரிழந்தவர்களுக்கு இரங்கலும் தெரிவித்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து கரூர் டவுன் போலீசார் தவெக கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன், தவெக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், கட்சி நிர்வாகி சி.டி.நிர்மல்குமார் மற்றும் பலர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில், கரூர் நெரிசல் தொடர்பாக வழக்குப்பதிவான நிலையில் தவெக பொதுச்செயலாளர் ஆனந்த், கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன், நிர்மல்குமார் ஆகியோரிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். விசாரணைக்கு வராவிட்டால் 3 பேரையும் கைது செய்து விசாரிக்க காவல்துறையினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் தவெகவினர் இது தொடர்பான வழக்கில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்யப்படவும் வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
English Summary
Karur stampedeTavek General Secretary Anand arrested?