கரூர் துயரம் சம்பவம்: சமூகவலைதளங்களில் அவதூறு பரப்பியதாக 03 பேர் கைது..! - Seithipunal
Seithipunal


கரூரில் தவெக தலைவர் விஜய் பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்துள்ளனர். இதில், படுகாயம் அடைந்த பலர் இன்னமும் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். இந்த துயர சம்பவம் குறித்து சமூக வலைதளங்களில் அவதுறு பரப்பியதாக 03 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த ஒருநபர் ஆணையத்தை தமிழக அரசு அமைக்க, அந்த ஆணையமும் தமது விசாரணையை தொடங்கியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து, பொதுவெளியியில் வதந்தி பரப்பினால் நடவடிக்கை பாயும் என்று தமிழக அரசு தரப்பில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில், சமூகவலைதளங்களில் வெளியிடப்படும் பதிவுகளைத் தொடர்ந்து 25 பேர் மீது போலீசார் வழக்கும் பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் கரூர் துயரச் சம்பவம் பற்றி சமூக வலைதளங்களில் அவதூறுகளை பரப்பியதாக 03 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களில் இருவர் தவெகவைச் சேர்ந்தவர்கள். ஒருவர் பாஜவைச் சேர்ந்தவர் என கூறப்படுகிறது.

சென்னை பெரும்பாக்கம் சகாயம் (பாஜ)
ஆவடி சரத்குமார் (தவெக)
மாங்காடு சிவனேசன் (தவெக)


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

03 people arrested for spreading defamation on social media regarding the Karur tragedy


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->