மேட்ரிமோனி மூலம் அறிமுகம்...பல முறை உல்லாசம்..இளம்பெண்ணுக்கு நடந்த விபரீதம்!
Introduction through matrimony multiple instances of abuse a horror story that happened to a young woman
மேட்ரிமோனி மூலம் அறிமுகம் ஆன வாலிபர் இளம் பெண் ஒருவரை பல முறை உல்லாசம் அனுபவித்து விட்டு ஏமாற்றியவரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை, சூளைமேட்டை சேர்ந்த 24 வயது பெண் ஒருவர் அண்ணாநகர் அனைத்து மகளிர் போலீசில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அந்த புகாரில் அதில் தான் திருமணம் செய்து கொள்வதற்காக மேட்ரிமோனியில் பதிவு செய்திருந்தபோது சூர்யா என்பவருடன் அறிமுகமாகி பழகி வந்தோம். அவர் என்னிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தைகள் கூறி பலமுறை உல்லாசம் அனுபவித்தார்.மேலும், இருவரும் சேர்ந்து நிலம் வாங்கலாம் என கூறி என்னிடம் இருந்து ரொக்கமாக 8 லட்சம் ரூபாய் பணம், 9 சவரன் தங்க நகைகள், லேப்டாப், செல்போன் என அனைத்தையும் வாங்கி கொண்டார்.
எப்போது திருமணம் செய்து கொள்ளலாம் என்று கேட்டபோதும் ,என்னிடம் வாங்கிய பணம், நகை, மற்றும் பொருட்களை கேட்டபோதும் , நாம் உல்லாசமாக இருந்தபோது எடுத்தபுகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றி விடுவேன் என மிரட்டினார் என்று புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.
அதுன்மட்டுமல்லாமல் என்னை ஏமாற்றி என்னிடம் இருந்து நகைகள் பணம் பறித்து மோசடி செய்த சூர்யாவை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் கூறியிருந்தார்.
இது தொடர்பாக அண்ணாநகர் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி , தனிப்படை அமைத்து அவரை தேடி வந்தனர். இந்தநிலையில் தனிப்படை போலீசார் திருநெல்வேலிக்கு சென்று, அங்கு பதுங்கி இருந்த சூர்யாவை கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர்.
அமைந்தகரை பாலம் அருகே வரும்போது சூர்யா அங்கிருந்து தப்ப முயன்று, தவறி விழுந்ததில் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. மேலும், போலீசார் நடத்திய விசாரணையில் இவர் 2024 ல் இதே போல் துரைப் பாக்கம் பகுதியில் ஒரு பெண்ணை ஏமாற்றி, வழக்கில் சிக்கியது தெரிய வந்தது. அவரிடமிருந்து ஒரு கார், செல்போன், லேப்டாப் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
English Summary
Introduction through matrimony multiple instances of abuse a horror story that happened to a young woman