காவல்துறையின் கோரிக்கையை நிறைவேற்றவேண்டும்...MLA நேரு வலியுறுத்தல்!
The police departments demand must be fulfilled MLA Nehru emphasizes
புதுச்சேரியில் உள்ள இந்திய ரிசர்வ் பட்டாலியன் பிரிவு காவலர்களை காவல்துறையுடன் இணைத்து கொள்ளவேண்டும் என உருளையன்பேட்டை சட்டமன்ற தொகுதி MLA G.நேரு(எ)குப்புசாமி வலியுறுத்தியுள்ளார்.
திரு.G.நேரு(எ)குப்புசாமி MLA அவர்கள் அமேதகு துணைநிலை ஆளுநர் அவர்கள்,விடுத்துள்ள கோரிக்கையில்
புதுச்சேரி காவல்துறையானது பிரெஞ்சு பாரம்பரியத்துடன் நீண்ட நெடிய வரலாற்றை கொண்ட சிறப்பு பெற்ற துறையாகும். அக்டோபர் 1ம் தேதி காவல்துறையின் உதயத்தின் நாளாக கொண்டாடப்படும் இந்த வேளையில் நம்
புதுச்சேரி காவல்துறையில் பணிபுரியும் காவலர்கள் பலவிதமான பணி சுமைகளுக்கிடையே தங்களது காவல்பணியை செய்துவருகிறார்கள்புதுச்சேரியில் எந்த ஒரு நிகழ்வுகள் நடந்தாலும் அங்கு முதல் ஆனாக காவல்துறையினர் சென்று பணியில் ஈடுபடுகிறார்கள். சட்டம் ஒழுங்கு பிரச்சனையாக இருந்தாலும் சரி, பண்டிகைகள் மற்றும் திருவிழா காலங்களிலும் இரவு, பகல் பாராமல் பணிகளில் ஈடுபட்டு கடமையாற்றுகிறார்கள். அதேபோல் மழை வெள்ளம் போன்ற பேரிடர் காலத்தின்போது அவர்களின் பணி அளப்பறியது. அதுமட்டுமல்லாது அரசாங்கத்தினை எதிர்த்து நடைபெறும் போராட்டங்களையும், அரசின் அந்தந்த துறைகளில் ஏற்படும் தவறுகளை சுட்டிகாட்டி எதிர்கட்சிகள் நடத்தும் போராட்டங்களையும், அதேபோல அந்தந்த பகுதிகளில் ஏற்படும் விபத்துகள் மற்றும் அசம்பாவித சம்பவங்களால் ஏற்படும் சட்டம்ஒழுங்கு பிரச்சனைகள், பொதுநல அமைப்பினர், மாணவர்கள், அரசியல்கட்சியினர் போன்றோர் அவரவர் கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்தும் முற்றுகை போராட்டங்கள் ஆர்பாட்டங்கள், சாலை மறியல் போன்ற போராட்டங்கள் கடைசியாக முடிவுற்று அமைதி ஏற்படும்வரை இரவு பகல் மற்றும் மழை வெயில் என்று பாராமல் காவல் பணியில் ஈடுபடுகிறார்கள்.
மேதகு குடியரசு தலைவர் அவர்கள், பாரத பிரதமர் அவர்கள், மத்திய அமைச்சர்கள் போன்ற தேசிய தலைவர்கள் புதுச்சேரிக்கு வருகை தரும் போது இரவு பகல் பாராமல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.
பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல் காலத்தில் காவல்துறையினருக்கு அதிக பணிசுமை ஏற்படுகிறது. மேலும் அவர்களின் பெற்றோர், மனைவி, பிள்ளைகள் உள்ளிட்ட குடும்பத்தாரை கூட கவனிக்க நேரம் ஒதுக்க முடியாத நிலையில் பணிபுரிகிறார்கள். இப்படி எல்லாவகையிலும் கூடுதல் பணிசுமையுடன் பணிபுரியும் காவலர்களின் நியாயமான பல கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் இருப்பது வேதனையளிக்கிறது.
காவல்துறையில் பணிபுரியும் காவலர்களின் நீண்டநாட்களாக கோரிவரும் கீழ்கண்ட கோரிக்கைகளை அரசு உடனே நிறைவேற்றி தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
1. பிற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் காவல்துறையினரின் நலனுக்காக செயல்படும் காவலர் கூட்டுறவு வீட்டு வசதி சங்கம் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிது.
அதை பின்பற்றி புதுச்சேரி காவல்துறை காவலர்கள் மற்றும் இந்திய ரிசர்வ் பட்டாலியன் பணிபுரியும் அதிகாரிகள் உள்ளிட்ட காவலர்கள் அனைவரும் பயனடையும் விதமாக புதுச்சேரி காவலர் கூட்டுறவு வீட்டு வசதி சங்கம் அமைக்க அனுமதித்து மற்ற அரசு துறை ஊழியர்கள் கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தினர் பயன்பெறுவது போல் காவல்துறையில் பணிபுரிவோரும் பயன்பெற செய்ய வேண்டும். (புதுச்சேரி காவல்துறையில் 18.09.2007 தேதியில் (Puducherry police personnel co operative housing society Ltd No. P 772) என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட சங்கம் ஏதோ சில காரணங்களால் கலைக்கப்பட்டதாக தெரிகிறது).
2.பிற மாநிலங்களில் காவல்துறையில் பணிபுரியும் காவலர்கள் விபத்துகளால் பாதிக்கப்பட்டு படுகாயம் அடைந்தால் விபத்தின் தன்மையை பொறுத்து இழப்பீடு தொகை அரசு சார்பாக வழங்கப்படுகிறது. மேலும் மருத்துவ சிகிச்சைக்காக இலவச மருத்துவ காப்பீடு திட்டம் உள்ளது. இதை பின்பற்றி புதுச்சேரி காவல்துறை மற்றும் இந்திய ரிசர்வ் பட்டாலியன் படைப்பிரிவில் பணிபுரியும் அதிகாரிகள் உள்ளிட்ட காவலர்களுக்கு அரசு சார்பாக இலவச மருத்துவ காப்பீடு (Police health insurance scheme) திட்டத்தை கொண்டு வந்து அவர்களுக்கு உதவ வேண்டும்.
(குறிப்பு:- புதுச்சேரி காவல்துறையில் 2024 ஆகஸ்ட் 8ம் தேதியில் தலைமை காவலர் 3153 வசந்த என்பவர் பணியின் போது கஞ்சா குற்றவாளிகளால் மிகவும் கொடூரமாக தாக்கப்பட்டு பலத்த படுக்காயங்களுடன் அவசர சிகிச்சை பிரிவில் பல மாதங்களுக்கு சிகிச்சை எடுத்த பிறகு தற்போது பணியில் இணைந்துள்ளார். மற்ற மாநிலங்களில் உள்ள காவல்துறையில் வழங்கப்படுவதுபோல் அதாவது பணியின்போது விபத்துக்களாலோ அல்லது குற்றவாளிகளால் ஏற்படும் படுங்காயங்களுக்கு ஏற்றார்போல் இழப்பீடு தொகை வழங்கப்படுகிறது. அதை பின்பற்றி ரவுடிகளால் படுங்காயமடைந்து சிகிச்சை பெற்று உயிர் தப்பிய தலைமை காவலர் 3153 வசந்த் என்ற காவலருக்கு இழப்பீடு தொகையாக பத்து லட்ச ரூபாயை அரசு வழங்க முன்வரவேண்டும்.
3. புதுச்சேரி அரசு துறைகளில் உள்ள அதிகாரிகள் உள்ளிட்ட ஊழியர்களுக்கு வார விடுமுறை மற்றும் பண்டிகை கால அரசு விடுமுறை போன்ற விடுமுறைகளை கணக்கிட்டால் குறைந்தபட்சம் நூறு நாளுக்கு மேல் உள்ளது. ஆனால் புதுச்சேரியில் காவல்துறையில் பணிபுரியும் காவலர்களுக்கு விடுமுறை நாட்களுக்கான ஊதியம் 30 நாட்கள் என கணக்கிட்டு அதற்கான சம்பளம் தருகிறார்கள். இதை குறைந்தபட்சம் 60 நாட்களாக உயர்த்தி அதற்கான ஊதியத்தை சம்பளமாக வழங்கவேண்டும். அல்லது சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களை கணக்கிட்டு அதற்கான சம்பளத்தை வழங்க முன்வரவேண்டும்.
4. புதுச்சேரியில் சுகாதாரத்துறை, சிறைத்துறை, தீயணைப்பு துறை போன்ற துறைகளில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு இரவு பணிக்கான இரவு படித்தொகை கணக்கிட்டு தருகிறார்கள். புதுச்சேரி காவல்துறை மற்றும் இந்திய ரிசர்வ் பட்டாலியன் பணிபுரியவர்களும் அனைவரும் இரவு பணி செய்து வருகிறார்கள். ஆனால் இதற்கான இரவு பணி படி (Night duty allowance) தொகையை கொடுப்பதற்கு பரிசீலனை செய்ய வேண்டும்.
5. இந்திய ரிசர்வ் பட்டாலியன் படைப்பிரிவை பொறுத்தவரை 2015 ஆண்டில் இணைந்த ஒன்பது காவலர்களுக்கு மற்ற காவலர்கள் சம்பள நிலைய விட ஒரு கிரேடு சம்பள குறைவாக கொடுக்கப்படுவதாக தெரிகிறது. அதேபோல D பிரிவு ஊழியர்களுக்கு முறையான பதவி உயர்வு மற்றும் ஊதிய குறைபாடுகள் நிலவுகிறது. அதேநேரத்தில் இந்திய ரிசர்வ் பட்டாலியன் படைப்பிரிவில் பல ஆண்டுகளாக புதிய காவலர் தேர்ந்தெடுக்கப்படாமல் இருக்கிறது. அதேபோல் அமைச்சகம் ஊழியர்கள், ஓட்டுநர்கள் என்ற பல பதவிகள் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக நிரப்பப்படாமல் காலியாக இருக்கிறது. அந்த காலிபணியிடங்களை நிரப்பி இந்திய ரிசர்வ் பட்டாலியன் படைப்பிரிவை செம்மைப்படுத்த வேண்டும்.
6. அண்டை மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா போன்ற பல மாநிலங்களில் 10 ஆண்டுகள் பணிபுரிந்த இந்திய ரிசர்வ் பட்டாலியன் பிரிவு காவலர்களை அந்தந்த மாநில காவல்துறையுடன் இணைத்துக்கொள்கிறார்கள். அதேநேரத்தில் 1985ம் ஆண்டிற்கு முன் தனியாக செயல்பட்டு வந்த புதுச்சேரி ஆயுதப்படை காவல்பிரிவை புதுச்சேரி காவல் துறையுடன் இணைத்து கொள்ளப்பட்டது. அதேபோல் புதுச்சேரியில் உள்ள இந்திய ரிசர்வ் பட்டாலியன் பிரிவு காவலர்களை காவல்துறையுடன் இணைத்து கொள்ளவேண்டும் என உருளையன்பேட்டை சட்டமன்ற தொகுதி MLA G.நேரு(எ)குப்புசாமி வலியுறுத்தியுள்ளார்.
English Summary
The police departments demand must be fulfilled MLA Nehru emphasizes