அரசு பேருந்தின் கொடிய வேகம்! - வாலாஜாபாத் சாலையில் 2 இளைஞர்கள் பரிதாப பலி...! நடந்து என்ன...?
speed government bus 2 youths died tragically on Walajabad road What happened
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே கீழோடி வாக்கத்தைச் சேர்ந்த பிரதீப் மற்றும் அஸ்வின் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது, காஞ்சிபுரத்திலிருந்து அதிவேகமாக வந்த அரசு பேருந்து, எதிர்பாராத விதமாக மோதி விபத்தை ஏற்படுத்தியது. இதில் பிரதீப் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும், கடுமையான தலையடி காயத்தால் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அஸ்வினும் உயிரிழந்தார். இந்த இரு இளைஞர்களின் திடீர் மரணம் பகுதியெங்கும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக வாலாஜாபாத் காவலர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இதற்கிடையில், “காஞ்சிபுரம்-வாலாஜாபாத் சாலையில் அரசு பேருந்துகள் அதிவேகமாக செல்வது, இருசக்கர வாகன ஓட்டிகள் உயிர் பிழைப்பதே சவாலாக உள்ளது” என்று பொதுமக்கள் குற்றம்சாட்டி கவலை தெரிவித்துள்ளனர்.
English Summary
speed government bus 2 youths died tragically on Walajabad road What happened