அகில இந்திய சிலம்ப போட்டியில்.. சாதனை படைத்த கரூர் சிறுமி.!
Karur Girl achieved in Kerala tournament
அகில இந்திய அளவிலான சிலம்ப போட்டியில் கலந்து கொண்ட கரூர் மாணவி சாதனை புரிந்துள்ளார்.
கேரள மாநிலத்தில் இருக்கும் திருவனந்தபுரம் பகுதியில் அகில இந்திய அளவிலான சிலம்பப் போட்டி நடந்தது. இந்தப் போட்டியில் பல மாநிலங்களைச் சேர்ந்த மாணவிகள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டார்கள்.

இந்த போட்டியில் கரூர் மாவட்டத்தில் இருக்கும் கவுண்டம்பாளையம் தொடக்கப் பள்ளியில் படிக்கின்ற பூமிகா என்ற நான்காம் வகுப்பு மாணவியும் கலந்து கொண்டார். பத்து வயதிற்கு உட்பட்டவர்கள் பிரிவில் பூமிகா பங்கேற்று விளையாடி தனது திறமையை வெளிப்படுத்தினார்.
இதன் மூலம் அவர் இரண்டு தங்கப்பதக்கங்கள் மற்றும் ஒரு வெள்ளி பதக்கத்தை பெற்று சாதனை செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து மாநிலம் கடந்து சாதனை புரிந்த கரூர் பள்ளி மாணவியை தலைமை ஆசிரியர் பரணிதரன், உடன்படிக்கும் மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட பலரும் பாராட்டி வருகின்றனர்.
English Summary
Karur Girl achieved in Kerala tournament