சாதி விட்டு சாதி திருமணம்., எஸ்பி அலுவலகத்தில் பரபரப்பு புகார்.! - Seithipunal
Seithipunal


இருவேறு சமுதாயத்தைச் (சாதியை) சேர்ந்தவர்கள் திருமணம் செய்து கொண்டதால், அவர்களின் பெற்றோர்கள் தங்களுக்கு மிரட்டல் விடுப்பதாகவும், அதனால் எங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் கரூர் எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். 

ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜா. இவரின் மகள் பிரியதர்ஷினி. இவரும், கரூர் மாவட்டம், சணப்பிரட்டி கிராமத்தை சேர்ந்த மகாலிங்கம் என்பவரின் மகன் தினேஷ் குமாரும் கடந்த 4 வருடமாக காதலித்து வந்து உள்ளனர்.

இருவரும் வெவேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், இவர்களின் காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இதனையடுத்து வீட்டை விட்டு வெளியேறிய இருவரும், மாயனூர் அருகே உள்ள அருள்மிகு செல்லாண்டி அம்மன் திருக்கோவிலில் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில், பிரியதர்ஷினியின் தந்தை ராஜா, தாய் காவிரி, அண்ணன் லட்சுமணன் ஆகியோர் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும்m இதனால் எங்களுக்கு பாதுகாப்பு அளிக்குமாறும், கரூர் எஸ்பி அலுவலகத்தில் புகார் பிரியதர்ஷினி - தினேஷ்குமார் புகார் அளித்துள்ளனர்.

அந்த புகாரில், "எங்களுக்கு சட்டப்படி திருமண வயது எட்டியுள்ளது. நாங்கள் முறைப்படி திருமணம் செய்து கொண்டோம். ஆனால், எனது பெற்றோர்கள் இருவரையும் சேர்த்து வைப்பதாக கூறி மிரட்டுகின்றனர். சாதிப்பெயரை சொல்லி பிரிப்பதற்காக முயற்சித்து வருகிறார்கள். பெற்றோர்களிடம் இருந்து எங்களை காப்பாற்றி, பாதுகாப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்" என்று அந்த புகார் மனுவில் தெரிவித்துள்ளனர். 

சாதி விட்டு சாதி திருமணம் செய்து கொண்ட ஜோடி, பாதுகாப்பு கோரி பெட்டோர்கள் மீது புகார் அளித்து இருப்பது பரபரப்பை உண்டாக்கியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

karur erode lovers


கருத்துக் கணிப்பு

ஜெய் பீம் குறித்து.,Advertisement

கருத்துக் கணிப்பு

ஜெய் பீம் குறித்து.,
Seithipunal