வயிற்றுவலியால் அவதிப்பட்ட கூலித்தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை.. கரூரில் சோகம்.! - Seithipunal
Seithipunal


கூலித்தொழிலாளி வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்த நிலையில், இறுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

கரூர் மாவட்டத்தில் உள்ள பசுபதிபாளையம் சங்கர் நகர் தெருவை சார்ந்தவர் நாகராஜன் (வயது 48). இவர் கூலித்தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். கடந்த சில நாட்களாக நாகராஜன் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். 

இதுகுறித்து நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் தெரிவித்து வருத்தப்பட்டு இருக்கிறார். இந்த நிலையில், மனமுடைந்து காணப்பட்ட நாகராஜன், தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயற்சித்து இருக்கிறார். 

எதற்ச்சையாக இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள், நாகராஜனை மீட்டு சிகிக்சைக்கு கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மருத்துவமனையில் மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்துள்ளனர். 

ஆனால், நாகராஜன் சிகிச்சை பலனின்றி இன்று பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த பசுபதிபாளையம் காவல் துறையினர், நாகராஜனின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துவிட்டு, இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karur Coli Worker Nagarajan Aged 48 Suicide Have Stomach Pain Last Couple Of Days


கருத்துக் கணிப்பு

ஜெய் பீம் குறித்து.,Advertisement

கருத்துக் கணிப்பு

ஜெய் பீம் குறித்து.,
Seithipunal