ரஷ்யா டூ கரூர் | ராகுல் காந்திக்கு இப்படி ஒரு ஆசையா?!
Karur businessman bought puppy Rahul Gandhi
கரூர் சின்னாண்டாங் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 32) இவர் வீட்டு உபயோக கட்சி ஜவுளி பொருட்கள் ஏற்றுமதி செய்யும் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.
இவருக்கு நாய் வளர்ப்பதில் ஆர்வம் உள்ளதால் வெளிநாடுகளில் இருந்து நாய்களை இறக்குமதி செய்து அதனை வளர்த்து விற்பனை செய்து வருகிறார்.
இந்நிலையில் 10 ஆண்டுகளுக்கு முன்பு ரஷ்யாவின் ஜாக் ரசல் டெரியர் என்ற வகையைச் சேர்ந்த இரண்டு ஜோடி நாய்க்குட்டிகளை இறக்குமதி செய்து வளர்த்து வந்தார்.
தற்போது அவை ஈன்றும் குட்டிகளை விற்பனை செய்து வருகிறார். இவர் சமூக வலைதளங்களில் இந்த அரிய வகை நாய்களை குறித்து தகவலை வெளியிட்டு வந்துள்ளார்.
கடந்த ஆண்டு இதனை பார்த்து கேரள போலீசார் கரூர் வந்து 4 கோடிகளை வாங்கிச் சென்றனர். இதற்கிடையே ஒரு குழு சமீப காலத்தில் சரவணனை தொடர்பு கொண்டு காங்கிரஸ் முன்னால் தலைவர் ராகுல் காந்திக்கு இந்த வகை நாய்க்குட்டி வேண்டும் என தெரிவித்தனர்.
பின்னர் கரூரில் உள்ள ஒரு அலுவலகத்திற்கு கடந்த மாதம் ராகுலின் உதவியாளர்கள் வந்து, நாய்க்குட்டி வளர்ப்பு குறித்து கேட்டறிந்தனர்.

இதனைத் தொடர்ந்து சரவணனை நேரில் சந்திக்க ராகுல் காந்தி கேரளா வந்து, அவரிடம் இருந்த மூன்று ஜாக் ரசல் டெரியர் வகை நாய்க்குட்டிகள் சந்தித்து மூன்றில் ஒரு குட்டியை ராகுல் காந்தி தேர்வு செய்தார்.
அந்த நாய்க்குட்டியானது பிறந்து 40 நாட்கள் மட்டுமே ஆனதால் 60 நாட்கள் வரை கரூருக்கு கொண்டுவரப்பட்டு, பின்னர் அதனை சரவணன் டெல்லியில் இருக்கும் ராகுல் காந்தி வீட்டிற்கு நேரில் சென்று வழங்கினார்.
இது தொடர்பாக சரவணன் தெரிவித்திருப்பதாவது, ''குடும்ப உறுப்பினர்களிடம் இந்த வகை நாய் குட்டிகள் மிக எளிதாக பழகும்.
எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும். இதனால் பலர் முன்வந்து இந்த வகை நாய் குட்டிகளை வாங்கி செல்கின்றனர்.
ராகுல் காந்தி, நான் வளர்த்த நாய்க்குட்டியை ஆசையாக பெற்றுக் கொண்டார். அந்த தருணம் எனக்கு மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது'' என தெரிவித்தார்.
English Summary
Karur businessman bought puppy Rahul Gandhi