அரசுப் பேருந்தும், ஆட்டோவும் நேருக்குநேர் மோதி விபத்து!
Karpadi Govt Bus Auto Accident
காட்பாடியில் அரசு பேருந்தும் ஆட்டோவும் நேருக்கு நேர் மோதி நிகழ்ந்த விபத்தில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் உயிரிழந்தார்.
பெங்களூருவைச் சேர்ந்த 69 வயதான சுந்தரவாசன் மற்றும் அவரது மனைவி சுமதி ஆகியோர் விவேகானந்தன் என்பவர் இயக்கிய ஆட்டோவில் காட்பாடி ரயில் நிலையம் நோக்கி பயணம் செய்தனர்.
அப்போது தாராபடவேடு வி.ஏ.ஓ அலுவலகம் அருகே வேலூர் நோக்கிச் சென்ற அரசு பேருந்தும், எதிரே வந்த இவர்களின் ஆட்டோவும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.
விபத்தில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சுந்தரவாசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது மனைவி சுமதி மற்றும் ஆட்டோ ஓட்டுநர் தூக்கி வீசப்பட்ட நிலையில் படுகாயமடைந்தனர்.
விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் காட்பாடி போலீசார் விரைந்து சென்று இருவரையும் மீட்டு, வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். சுந்தரவாசனின் உடலும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த விபத்து தொடர்பாக காட்பாடி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Karpadi Govt Bus Auto Accident