டாஸ்மாக் அதிகாரிகளிடம் அமலாக்கத்துறை நடத்திய விசாரணை நிறைவு: திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் ஆஜாரவில்லை..!
Enforcement Department investigation into TASMAC officials completes
கடந்த 16-ஆம் தேதி முதல் 10க்கும் மேற்பட்ட இடங்களில் டாஸ்மாக் நிறுவன அதிகாரிகளின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
சென்னை மணப்பாக்கம் சி.ஆர். புரத்தில் உள்ள டாஸ்மாக் மேலாண் இயக்குநர் விசாகன் வீட்டில் மத்திய ரிசர்வ் படை பாதுகாப்புடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அடுத்தகாத, சென்னை சூளைமேடு கல்யாணபுரத்தில் உள்ள எஸ்.என்.ஜே. மதுபான நிறுவன அலுவலகத்திலும், தேனாம்பேட்டையில் உள்ள திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீடு மற்றும் திருவல்லிக்கேணியில் தொழிலதிபர் தேவக்குமார் இல்லத்திலும் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையை சட்டவிரோதமானது என அறிவிக்க கோரி டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அத்துடன், அமலாக்கத் துறை தொடர்ந்து விசாரணை நடத்த முழு அனுமதி அளித்து உத்தரவிட்டது. இதனையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசு சுஉச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது.
இந்நிலையில், டாஸ்மாக் வழக்கு தொடர்பாக நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் டாஸ்மாக் உயர் அதிகாரிகள் இன்று விசாரணைக்கு ஆஜர் ஆகினர். இதன் போது டாஸ்மாக் அதிகாரிகள் ஜோதி சங்கர், சங்கீதா இருவரிடமும் 06 மணி நேரமாக தனித்தனியாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு எழுத்துப்பூர்வமாக வாக்குமூலம் பெற்றனர்.

அத்துடன், ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபர் துரைராஜ் செல்வராஜ் ஆகியோருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தநிலையில் அவர்கள் இன்று ஆஜராகவில்லை.
இதனைத்தொடர்ந்து டாஸ்மாக் முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன், இன்று டாஸ்மாக் அதிகாரிகளிடம், சென்னை அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடைபெற்ற விசாரணை நிறைவடைந்துள்ளது.
English Summary
Enforcement Department investigation into TASMAC officials completes