அம்மாவாசை அன்று குலதெய்வ வழிபாடு செய்வது ஏன்? இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததா?!
ammavasai kula deiva vazhipadu yean
அமாவாசை நாளில் முன்னோர்களின் ஆத்ம சாந்திக்காக செய்யப்படும் தர்ப்பணம், திதி, பூஜைகள் மிகுந்த பலன்களை தருவதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. ஹோமம் செய்ய முடியாதவர்களும், எள்ளும் நீரும் கொண்டு செய்யப்படும் எளிய தர்ப்பண வழிபாடு மூலம் பித்ரு தோஷம் நீங்கி, குடும்பத்துக்கு நிம்மதி கிடைக்கும். இந்த நீரின் ஆற்றல் பித்ருலோகத்தை அடையும் என்பதால், அமாவாசை தினம் தர்ப்பணம் தவறாமல் செய்வது அவசியம்.
அன்று அசைவ உணவு தவிர்த்து விரதம் இருந்து, மந்திர உச்சரிப்புகள் செய்யலாம். இதனால் வீட்டில் நேர்மறை ஆற்றல்கள் அதிகரிக்கும். பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து, வீடு சுத்தம் செய்து, காலை, மாலை விளக்கேற்றி பூஜை செய்வது சிறப்பான பலனை தரும்.
அமாவாசை தினம் குலதெய்வ வழிபாடும் முக்கியம். வீட்டில் கலசம் வைத்து, குலதெய்வத்தை நினைத்து தீபம் ஏற்றி, நைவேத்தியம் வைத்து வழிபடலாம். குலதெய்வத்தின் பெயருடன் "ஓம் ஸ்ரீம் நமஹ" என்று 108 முறை சொல்லி மனதார பிரார்த்தனை செய்ய வேண்டும்.
சைவ உணவுகள் சமைத்து படையல் வைத்து, தேங்காய் உடைத்து, கற்பூர தீபம் காட்டி முன்னோர்களையும் குலதெய்வத்தையும் நினைத்து வழிபடுவது நல்லது.
குலதெய்வம் தெரியாதவர்கள் "ஓம் குலதெய்வமே வசி வசி" என்று சொல்லினாலும் போதுமானது. மேலும் மேல்மலையனூர் அங்காளம்மனை குலதெய்வமாக ஏற்று வழிபட்டால் அனைத்து தடைகள் நீங்கி, நன்மைகள் கிட்டும்.
அமாவாசை தினம் வீட்டிலேயே வழிபாடு செய்து, ஏழைக்கு உணவளித்த பின் சாப்பிடுவது, குலதெய்வ ஆலயத்திற்குச் சென்ற புண்ணியத்தைப் பெற்றுத்தரும். இவ்வாறு வழிபடும் போது முன்னோர்களின் ஆசீர்வாதமும், குலதெய்வ அருளும் குடும்பத்தை வளமாக்கும்.
English Summary
ammavasai kula deiva vazhipadu yean