தாய், தந்தை, அண்ணனை கொலை செய்த தம்பி? டெல்லியில் நடந்த கொடூரன் கொலை சம்பவம்!
Delhi family members murdered youngest son escape
டெல்லியின் சத்பாரி கார்க் கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை, மகன் ஆகியோர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொல்லப்பட்டவர்கள் பிரேம் சிங், அவரது மனைவி ரஜனி, மூத்த மகன் ரித்திக் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களின் கழுத்து அறுக்கப்பட்டதோடு, கல்லால் தலையை நசுக்கிய நிலையில் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.
சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார், தரையில் இருவர் உயிரிழந்த நிலையில் கிடந்ததையும், மேல்தளத்தில் மற்றொருவரின் உடல் இருந்ததையும் கண்டனர். உடல்களை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளன. தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தில் சான்றுகள் சேகரித்தனர்.
இந்தக் கொலைக்குப் பின்னால் குடும்பத்தின் இளைய மகன் சித்தார்த் (22) இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அவர் தற்போது காணவில்லை. அப்பகுதி மக்களும், “சித்தார்த் அடிக்கடி ஆவேசமாக நடந்து கொண்டார்” என்று போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.
விசாரணையில், சித்தார்த் நீண்டகாலமாக மனநல சிகிச்சை பெற்று வந்ததாக மருத்துவ சான்றிதழ்கள் வீட்டிலிருந்து மீட்கப்பட்டுள்ளன. சுமார் 12 ஆண்டுகளாக அவர் சிகிச்சையில் இருந்ததாகவும் தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில், அவர் மனநிலையைக் கட்டுப்படுத்த முடியாமல் மூர்க்கத்தனமாக நடந்துகொண்டிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.
தற்போது, சித்தார்த் எங்கே உள்ளார் என்பதைத் தேடி போலீசார் விசாரணை தீவிரப்படுத்தியுள்ளனர். அவர் கைதான பின்பே, இந்தக் கொடூரக் கொலைக்கான உண்மையான காரணம் வெளிச்சம் பார்க்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
English Summary
Delhi family members murdered youngest son escape