வரம்பை மீறிய பாகிஸ்தான் தூதரக அதிகாரி: 24 மணி நேரத்தில் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்: மத்திய அரசு உத்தரவு..!
The central government has ordered a Pakistani diplomat exceeded the limit to leave the country within 24 hours
டில்லியில் பணியாற்றும் பாகிஸ்தான் தூதரக அதிகாரி ஒருவரை 24 மணி நேரத்தில் வெளியேறும்படி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரலில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியத்தில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இதனை தொடர்ந்து இந்தியா அதிரடி நடவடிக்கையை எடுத்து வருகிறது.
அதன் படி, டில்லியில் உள்ள பாகிஸ்தான் துாதரகத்தில் இருந்து 20-க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும், ராணுவ பகுதிகளை உளவு பார்த்ததாக பெண் உட்பட இருவரை பஞ்சாப் போலீசார் சமீபத்தில் கைது செய்தனர்.

விசாரணையில் அவர்களுக்கும் பாகிஸ்தான் துாதரக அதிகாரி ஒருவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்ததை அடுத்து, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் அந்த துாதரக அதிகாரியை 24 மணி நேரத்திற்குள் நாட்டைவிட்டு வெளியேறும்படி கடந்த 13-ஆம் தேதி உத்தரவிட்டது.
இந்நிலையில், பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றும் மற்றொரு அதிகாரியையும் அடுத்த 24 மணி நேரத்திற்குள் வெளியேறும்படி வெளியுறவுத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. குறித்த அதிகாரி, இந்தியாவில், தனது அதிகார வரம்பை மனதில் கொள்ளாமல் செயல்பட்டுள்ளார். இதன் காரணமாக பாகிஸ்தான் தூதரக பொறுப்பு அதிகாரிக்கு சம்மன் அனுப்பிய வெளியுறவு அமைச்சகம், பாகிஸ்தான் தூதர்கள் அல்லது அதிகாரிகள் தங்கள் அதிகாரத்தை மீறாமல் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளது.
English Summary
The central government has ordered a Pakistani diplomat exceeded the limit to leave the country within 24 hours