தமிழக பகுதியில் அத்துமீறல்... கன்னட மொழியில் பெயர்ப்பலகை இல்லாததால் வட்டாள் நாகராஜ் தரப்பு அட்டூழியம்.! - Seithipunal
Seithipunal


தமிழக எல்லைக்குள் நுழைந்து நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமாக உள்ள தமிழ் பெயர் பலகையில், கன்னட மொழி பதிவு செய்யப்படவில்லை என்று கூறி, வட்டாள் நாகராஜ் தலைமையிலான கன்னட அமைப்பினர் ஆர்ப்பாட்டம் செய்து பெயர்பலகை அகற்றியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் தமிழக எல்லைப் பகுதியான தாளவாடி மலைப்பகுதியில் ராமாபுரம் என்ற இடம் உள்ளது. இந்த இடத்தில் தேசிய நெடுஞ்சாலையில் வைக்கப்பட்டிருந்த பெயர் பலகையில், " தமிழ்நாடு மாநில எல்லை முடிவு " என தமிழ் மொழியில் எழுதப்பட்டுள்ளது. 

இந்த பலகையில் கன்னட மொழியில் தமிழக எல்லை முடிவு என்ற வாசகம் இடம்பெறவில்லை என்று கூறி, சலுவாலியா கட்சித் தலைவர் வாட்டாள் நாகராஜ் தலைமையிலான கன்னட அமைப்பினர் சிலர், அங்கு வந்து ஆர்ப்பாட்டம் செய்து பெயர் பலகையை அடித்து நொறுக்கி ஆதரவாளர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karnataka Vatal Nagaraj Damaged Board Tamilnadu Limit State Border End Erode Thalavadi


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->