தமிழக எல்லையில் குவிந்த கர்நாடகா மக்கள் - எதற்காக தெரியுமா?
Karnataka peoples gathered firecracker in tamilnadu
கர்நாடகா, அத்திப்பள்ளியில் கடந்த மாதம் 7 ஆம் தேதி பட்டாசு விற்பனை கடை மற்றும் குடோனில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 17 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதன் காரணமாக மாநில எல்லையான அத்திப்பள்ளியில் இந்த வருடம் பட்டாசு விற்பனைக்கு அரசு தடை விதித்துள்ளது. மேலும் கர்நாடகா மாநிலத்தில் பட்டாசு அதிக விலைக்கு விற்கப்படுவதாக தெரிகிறது.
இதனால் தமிழக எல்லையான ஜூஜ வாடி பகுதியில் உள்ள பட்டாசு கடைகளுக்கு கர்நாடகா மக்கள் நேற்று குடும்பம் குடும்பமாக வந்து தேவையான பட்டாசுகளை வாங்கி சென்றனர்.
தமிழக அரசு இந்த ஆண்டு 2 மணி நேரம் மட்டும் தங்கள் வீடுகளில் பட்டாசுகள் வெடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளதால் தமிழக மக்கள் பட்டாசுகளை வாங்குவதில் அதிகம் ஆர்வம் காட்டவில்லை.

கர்நாடகாவில் பட்டாசு விலை கூடுதலாக உள்ளதால் தொடர்ந்து தமிழகத்திற்கு கர்நாடகா மக்கள் படையெடுத்து வருவதால் கடைகள் மற்றும் சாலைகளில் அதிக அளவில் கூட்டம் காணப்படுகிறது.
மேலும் இந்த ஆண்டு புதிய ரக பட்டாசுகள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டதால் குழந்தைகள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.
பெரும்பாலானோர் பட்டாசு வாங்குவதற்கு காரில் வருவதால் கார்களை நிறுத்துவதற்கு போதிய இடவசதி இல்லாமல் சர்வீஸ் சாலைகளில் கார்களை நிறுத்தினர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
English Summary
Karnataka peoples gathered firecracker in tamilnadu