#பாதிரியார் பெனடிக்ட் ஆன்டோவுக்கு தீவிர ரசிகர் மன்றம்.! இணையத்தில் தீயாக பரவிய திருமண பேனர்.! - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி மாவட்டத்தைச் சார்ந்த கத்தோலிக்க பாதிரியாரான பெனடிக்ட்
ஆன்டோ பாவமன்னிப்பு கேட்க வந்த பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதும் அவர்களது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது செல்போனில் வைத்திருந்ததும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக பெனடிக்ட் கடந்த 6 நாட்களுக்கு முன்பாக தனிப்படையினரால் கைது செய்யப்பட்டார். அவரிடம் காவல்துறை தீவிரமாக விசாரணை செய்து வருகிறது. இந்நிலையில் கன்னியாகுமரியைச் சார்ந்த இளைஞர்கள் சிலர் ஒரு திருமண நிகழ்வின்போது பெனடிக் அன்டோ ரசிகர் மன்றம் என்ற பெயரில் வாழ்த்து பேனர் வைத்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தேவாலயங்களில் பாவமன்னிப்பு கேட்டு வரும் பெண்களை தனது பாலியல் சீண்டலுக்கு உட்படுத்தி இருந்தார் மத போதகர் பெனடிக்ட். இந்த சம்பவத்தை கலாய்க்கும் வகையில் அவர்கள் வைத்திருக்கும் பேனர் பலரது கவனத்தையும் ஈர்த்து இருக்கிறது.

அந்த பேனர் முழுவதும் பாதிரியாரை கலாய்க்கும் வகையில் வசனங்களை அச்சிட்டு வைத்துள்ளனர். மணமக்களின் வாழ்த்துக்களுக்கு பிறகு பாதிரியாரின் மீம்ஸ் மற்றும் வசனங்கள் அந்த பேனரில் இடம் பெற்றிருக்கிறது. இந்த பேனர்கள் பலரது கவனத்தையும் ஈர்த்து இருக்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

kanyakumari youth makes headilines after thier benedict anto fans club banner goes viral


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->