தொடர் கனமழை எதிரொலி! குமரி மாவட்ட பள்ளிகளுக்கு இன்றும் விடுமுறை!
Kanniyakumari district schools are closed today also due to heavy rain
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று இடி மின்னலின் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. குறிப்பாக தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மழையானது வரும் அக்டோபர் 9ம் தேதி வரை நீடிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த 3 நாட்களாக கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதன் காரணமாக நேற்று கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் கனமழை நீடித்து வருவதால் இன்றும் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிப்பதாக மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் அறிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் மழை நீர் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Kanniyakumari district schools are closed today also due to heavy rain