தூத்துக்குடியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு துண்டு துண்டாக வெட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்ட +2 மாணவி: 'உரிய நீதி கிடைத்திட துணை நிற்போம்'; கனிமொழி..! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தில் 12ஆம் வகுப்பு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, துண்டு துண்டுகளாக வெட்டிக் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த மாணவி வன்கொடுமை செய்யப்பட்டு துண்டு, துண்டாக வெட்டி கொலை செய்யப்பட்டிருப்பதால் இது ஏற்கனவே, திட்டமிட்டு செய்யப்பட்டது என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணையைத் நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில் இச்சம்பவத்தில் ஈடுப்பட்டவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என்றும், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினருக்கு துணை நிற்போம் என்றும் திமுக துணைப் பொதுச்செயலாளர் எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.

 இதுதொட அவர் வெளியிட்டுள்ளப் சமூக வலைத்தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது:

 "விளாத்திகுளம் அருகே பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. இக்கொடுஞ்செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளைத் தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அச்சமூக விரோதிகளுக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்கப்படுவதோடு, பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்தினருக்கு உரிய நீதி கிடைத்திட துணை நிற்போம்." எனக் குறிப்பிட்டுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Kanimozhi says we will stand by the plus2 student who was sexually assaulted dismembered and murdered in Thoothukudi to get due justice


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!


செய்திகள்



Seithipunal
--> -->