காஞ்சிபுரம் : லாரி - கார் நேருக்கு நேர் மோதி கொடூர விபத்து.. 5 பேர் பலி.!
Kanchipuram lorry and car accident 5 peoples death
காஞ்சிபுரம் அருகே லாரி கார் மோதி கொடூர விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
காஞ்சிபுரம் அருகே சித்தேரி மேடு பகுதியில் சரக்கு லாரி பழுதாகி சாலையோரம் நின்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக வந்த கார் அதிவேகமாக மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் காரில் பயணம் செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த ராஜேஷ், ரத்னா மற்றும் 3 குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதில் காரில் பயணம் செய்தவர்கள் திருவண்ணாமலை மாவட்டம் நொச்சிப்பட்டு பகுதியை சேர்ந்தவர்கள். இந்த விபத்தில் படுகாயமடைந்த ராமஜெயம் என்பவர் காஞ்சிபுரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
Kanchipuram lorry and car accident 5 peoples death