#கோவை || 12 நாளில் திருமணம்., அதற்குள் விபரீத முடிவு எடுத்த வாலிபர்.! - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சி மாவட்டம் வண்டிபாளையத்தை சேர்ந்த ராஜேந்திரன் மகன் சவுந்தர்ராஜன் (32 வயது 32). இவர் கோவை பீளமேடு ஆசிரியர் காலனியில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி, தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில், கடந்த மாதம் சவுந்தர்ராஜனுக்கு அவரின் பெற்றோர் பெண் பார்த்து திருமணம் செய்வதற்காக செய்தனர். அதன்படி வரும் 25-ந் தேதி திருமணம் நடைபெற இருந்தது. 

திருமணத்திற்கான ஏற்பாடுகளை பெற்றோர் கவனித்து வந்த நிலையில், சம்பவத்தன்று சவுந்தர்ராஜனின் சகோதரர் சிவக்குமார் செல்போன் மூலம் பேசியுள்ளார். பின்னர் சிலமணி நேரம் கழித்து சவுந்தராஜனை தொடர்பு கொண்ட போது போனை எடுக்கவில்லை.

 

இதனால் சந்தேகமடைந்த சிவகுமார், சவுந்தர்ராஜன் உடன் பணிசெய்யும் நபர்களுக்கு போன்செய்து விவரத்தை சொல்லியுள்ளார். இதனைடுத்து, அவர்கள் உடனடியாக சவுந்தர்ராஜன் தங்கி இருந்த அறைக்கு சென்று பார்த்தனர். அப்போது அறைக்குள் சவுந்தர்ராஜன் தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த நண்பர்கள் உடனடியாக பீளமேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், சவுந்தர்ராஜன் பயன்படுத்திய செல்போனை ஆய்வு செய்தனர். அந்த செல்போனில் தற்கொலை செய்வதற்கு முன்பு பதிவு செய்த வீடியோ இருந்தது. 

அந்த வீடியோவில், "எனக்கு வாழ பிடிக்கவில்லை.., நான் சாகப்போகிறேன்.., எனக்கு கடன் எதுவும் இல்லை.., என்னை நல்லபடியாக அடக்கம் செய்துவிடுங்கள்" என்று உருக்கமாக பேசியிருந்தார்.

இதனையடுத்து, சவுந்தராஜனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த போலீசார், இந்த தற்கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

12 நாட்களில் திருமணம் நடைபெற இருந்த நிலையில், வாலிபர் ஒருவர் தற்கொலை செய்த கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kallakurichi young man suicide in peelamedu


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->