நரேந்திர மோடி பங்கேற்கும் மதுரை மாநாடு: ‘தி.மு.க. ஆட்சிக்கு முடிவுக்கூட்டம்’...! - எல். முருகன் தீவிர தாக்கு
Madurai conference attended by Narendra Modi DMK End rule L Murugan attacks
மார்ச் 1-ம் தேதி மதுரை மண்டேலா நகரில் தேசிய ஜனநாயக கூட்டணியின் இரண்டாவது மிகப்பெரிய மாநாட்டு பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்த முக்கிய அரசியல் நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி நேரில் பங்கேற்கிறார்.
அதே நாளில் அரசு நிகழ்ச்சியும் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதால், இரு நிகழ்வுகளையும் ஒரே இடத்தில் நடத்தும் வகையில் விரிவான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்த ஏற்பாடுகளை மத்திய இணை அமைச்சர் எல். முருகன் நேரில் ஆய்வு செய்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளதாகவும், இது தி.மு.க. அரசுக்கு எதிரான பெரிய அரசியல் திருப்புமுனையாக அமையும் எனவும் தெரிவித்தார்.
மேலும், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்ற பக்தர்களின் நீண்டநாள் கோரிக்கைக்கு நீதிமன்றம் ஆதரவாக தீர்ப்பு வழங்கியதாக தெரிவித்தார்.
ஆனால் அந்த தீர்ப்பை அரசியல் கருவியாக மாற்றி நீதிபதி மீது நடவடிக்கை கோருவது தி.மு.க.வின் தவறான அணுகுமுறை என விமர்சித்தார்.முருக பக்தர்கள் தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில், 23-ம் தேதி வீடுகளில் விளக்கேற்றி கந்த சஷ்டி கவசம் பாடுமாறு வேண்டுகோள் விடுத்தார்.
பிரதமரின் வருகை தமிழக அரசியல் நிலையை மாற்றும் என்றும் அவர் குறிப்பிட்டார்.இந்த கூட்டணியின் வலிமை குறித்து பேசும்போது, “எங்கள் கூட்டணி உறுதியானதும் விரிவடையும் தன்மையுடையதும்.
மேலும் சில கட்சிகள் இணைய வாய்ப்பு உள்ளது. கூட்டணித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பல கட்சிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்” என்று தெரிவித்தார்.
English Summary
Madurai conference attended by Narendra Modi DMK End rule L Murugan attacks