களக்குறிச்சி | விவசாயநிலத்தில் வேலை அரிவாள் வெட்டு!
kallakurichi attacked farmer men arrested
கள்ளக்குறிச்சி:சங்கராபுரம் அடுத்து உள்ள பரமநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் அய்யம்பெருமாள். இவரது மகன் நடராஜன் (வயது 49).
அதே கிராமத்தை சேர்ந்த குமார் மனைவி கருப்பாயி, நடராஜனின் உறவினராவார். இந்நிலையில் கருப்பாயி நடராஜனின் நிலத்தில் வேலை பார்த்து கொண்டிருந்தார்.
அப்போது, அதே கிராமத்தை சேர்ந்த ஜெயக்குமார் (45) வேலை செய்யும் இடத்திற்கு வந்து கருப்பாயிடம் இது என்னுடைய இடம், இங்கு நீ எதற்கு வேலை செய்து கொண்டிருக்கிறாய் என்று கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இதனை பார்த்த நடராஜன், ஜெயகுமாரிடம் வந்து தட்டிக்கேட்டதால் ஆத்திரமடைந்து தகாத வார்த்தைகளில் திட்டி அரிவாளால் நடராஜனை தாக்கியுள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த அவர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து புகார் அளித்ததில் சங்கராபுரம் தலைமை காவலர் ராஜா வழக்குப்பதிவு செய்து ஜெயக்குமாரை கைது செய்தார்.
English Summary
kallakurichi attacked farmer men arrested