ஜூன் 2ம் தேதி குறிப்பிட்ட மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.!
June 2 local holiday to tuticorin district
தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் சிறப்பு பண்டிகைகள், கோவில் திருவிழாக்கள் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்களின் நினைவு தினங்கள் உள்ளிட்ட முக்கிய தினங்களை முன்னிட்டு அந்தந்த மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் வைகாசி மாத விசாகத் திருவிழா மிகவும் கோலாகலமாக நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டு வைகாசி விசாக திருவிழா வரும் ஜூன் இரண்டாம் தேதி முதல் ஜூன் மூன்றாம் தேதி காலை வரை நடைபெற உள்ளது.

இந்த திருவிழாவிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு காவடி எடுத்து வருவார்கள். இதனால் ஜூன் இரண்டாம் தேதி திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் எனவே பக்தர்களின் நலனுக்காக பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அந்த வகையில் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஜூன் இரண்டாம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும் இந்த விடுமுறை நாளை வீடு செய்யும் விதமாக வரும் ஜூன் 10ஆம் தேதி வேலை நாளாக இருக்கும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
English Summary
June 2 local holiday to tuticorin district