பத்திரிக்கையாளரின் உயிரை பறித்த 95% பணிகள் நிறைவடைந்த மழைநீர் வடிகால்வாய்! - Seithipunal
Seithipunal


முத்துகிருஷ்ணன் என்பவர் சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தின் டிஜிட்டல் பிரிவு உதவி ஆசிரியராக பணியாற்றி வந்தார். நேற்று இரவு பணி முடிந்து வீடு திரும்பிய பொழுது ஜாபிரகான் பேட்டை அருகே உள்ள மழைநீர் வடிகால்வாய் அமைப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தவறி விழுந்துள்ளார். அவர் விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உள்ளது.

இரவு நேரம் என்பதால் பள்ளத்தில் விழுந்த முத்துக்கிருஷ்ணனை யாரும் கவனிக்கவில்லை. அந்த வழியாக வந்த காவலர் ஒருவர் முத்துகிருஷ்ணன் பள்ளத்தில் விழுந்து கிடந்ததை பார்த்து உள்ளார். பின்னர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார். இதனை அடுத்து அவருடைய நண்பர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் முத்துக்கிருஷ்ணனை இன்று அதிகாலை சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட வந்த நிலையில் இன்று மதியம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

தமிழக அமைச்சர்களும் சென்னை மாநகராட்சி அதிகாரிகளும் 95% பணிகள் நிறைவு பெற்றுவிட்டன. இன்னும் ஓரிரு நாட்களில் முழுமையாக பணிகள் நிறைவடையும் என சில நாட்களுக்கு முன்பே தெரிவித்திருந்தனர். ஆனால் வடிகால்வாய் பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் செய்தியாளர் ஒருவர் விழுந்து உயிரிழந்த சம்பவமே சென்னை மாநகராட்சியின் பணிகள் எந்த அளவிற்கு முடிந்துள்ளது என்பதை காட்டுகிறது. எனவே சென்னை மாநகராட்சி துரிதமாக நடவடிக்கை எடுத்து மீதம் இருக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் அல்லது பள்ளம் இருக்கும் பகுதிகளை அடையாளம் கண்டு தடுப்பு வேலியை அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

journalist died in Chennai rainwater drainage ditch


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->