அதிரடி முடிவு!!! இனி தாக்குதல் அல்ல... போர் மட்டும் தான்...! - மத்திய அரசு
No more attack only war Central Government decision
காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில், 26 பேரை சுட்டுக்கொன்றனர். இதைத் தொடர்ந்து, பாகிஸ்தானிலுள்ள பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் தாக்கி அறவே அழித்தது.இதையடுத்து இந்தியாவில் பல இடங்களில் பாகிஸ்தான் அத்துமீறி கடுமையான தாக்குதல் நடத்தி வருகிறது.

இது குறித்து தேசிய பாதுகாப்புக்குழு தலைவர் ''அஜித் தோவல்'', இன்று காலை பிரதமர் மோடியை சந்தித்து பேசியதில்,முப்படை தளபதிகள் பிரதமர் நரேந்திர மோடியுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டனர்.
இந்த ஆலோசனையின் முடிவில், இனிமேல் இந்தியா மீதான தீவிரவாத தாக்குதல் போராகவே கருதப்படும் என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதுமட்டுமின்றி, வருங்காலத்தில் தீவிரவாத தாக்குதல்களுக்கு தகுந்த பதிலடி கொடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.இந்தத் தகவல் அதிகாரபூர்வமாக வெளிவரும் என நம்பப்படுகிறது.
மேலும் , பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவத்தின் போர் தாக்குதலின் சக்தியை காண்பிக்க நேரம் வந்து விட்டதாக பொது மக்கள் இணையத்தில் தங்களது கருத்துக்களை ஆதங்கத்துடன் தெரிவித்து வருகின்றனர்.
English Summary
No more attack only war Central Government decision