ஒரே இடத்தில் 21கலை நிகழ்ச்சி..கடலூரில் உலக சாதனை முயற்சி!  - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் காடாம்புலியூர் தனியார் பள்ளியில் மாபெரும் பாரம்பரிய கலையை மீட்டெடுக்கும் ஓர் உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது.  இதில் 21கலைகள் ஒரே இடத்தில் தொடர் நிகழ்ச்சியாக 24 மணி நேரமும் நிகழ்ச்சி நடைபெற்றது.

 பயிற்சி திலகம் திருவள்ளுவர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் பண்ருட்டி இரா.சேரன், மண்டலத் தலைவர் வணிக சங்கங்களின் பேரமைப்பு தா.சண்முகம், இவர்கள் முன்னிலை வகித்தனர். சோழன் உலக சாதனை நடுவர்கள் செல்வராஜ், மற்றும் ராஜகுரு, ஆகிய இருவரின் மேற்பார்வையில் உலக சாதனை நிகழ்வு பார்வையிட்டு அங்கீகரிக்கப்பட்டது, கவிபாரதி கிராமிய கலைக்குழு மாளிகைமேடு பா.மகாலட்சுமி-பார்த்திபன் வரவேற்புரை நிகழ்த்தினார், திருவள்ளூர் முத்தமிழ் சங்கம் கௌரவத் தலைவர் இரா.சஞ்சீவிராயர், திருவள்ளுவர் முத்தமிழ் சங்கம் ஆட்சி மன்ற குழு தலைவர் ரத்தினஆறுமுகம், கடலூர் தொழில் வர்த்தக சங்க செயலாளர் வீரப்பன், தொழிலதிபர் பரசு. முருகையன், தொழில் வர்த்தக சங்க பொருளாளர் டி.கருணாநிதி, ஜோதி கலர் லேப் பண்ருட்டி காமராஜ், ரோட்டரி கிளப் என்.மதிவாணன், இரா சிவகுமார், ஆகியோர்  முன்னிலை வகித்தனர் 

 மற்றும் ஜமா திரைப்பட புகழ் திருவண்ணாமலை பாரி இளவழகன், தமிழ்துறை துணை இயக்குனர் பேராசிரியர் அண்ணாமலை பல்கலைக்கழகம் செல்வ பாலு, திரைப்பட பின்னணி பாடகர் மற்றும் இசையமைப்பாளர் புதுவை சித்தன் ஜெயமூர்த்தி, தமிழ்நாடு பதவி உயர்வு பெற்ற முதல் நிலை பட்டதாரி ஆசிரியர் சங்கம் மாநிலத் தலைவர் பொன் செல்வராஜ், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற பொதுக்குழு உறுப்பினர் தேசிய விருத்தாளர் கலை 

 நண்மணி ந.சத்யராஜ், கலை வளர்மணி கலை பேராசிரியர் சாகா.மா.சங்கர்,விஜய் டிவி புகழ் கலக்கப்போவது யாரு சேகர்,வடலூர் திரைப்பட இயக்குனர் ஆதிரை, பண்ருட்டி முன்னாள் நகர மன்ற தலைவர் மாபா.பன்னீர்செல்வம்,பண்ருட்டி காவல்துணை கண்காணிப்பாளர் பி. ராஜா, காடாம்புலியூர் காவல் ஆய்வாளர் டி.நந்தகுமார்,பண்ருட்டி காவல் ஆய்வாளர் வேலுமணி, தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் மாநில ஒருங்கிணைப்பாளர் கே ரமேஷ்குமார், வழக்கறி மாவட்ட நீதிமன்றம் வெ.தணிக்கைசெல்வம் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர் 

  இந்த நிகழ்வில் சாமியாட்டம்,பம்பை, உடுக்கை,தவில், நாதஸ்வரம், கட்டைக்கால்,பொய்க்கால் குதிரை, கரகம்,மயிலாட்டம், மாடாட்டம், சிலம்பாட்டம்,கிராமிய பாடல், கோலாட்டம்,கும்மி, தெருக்கூத்து, வில்லுப்பாட்டு போன்ற ஆட்ட கலைகள் இடம்பெற்று கிராமியக் கலையில் முதல் முறையாக இந்திய வரலாற்றிலேயே முதல் உலக சாதனை பதிவாக இடம் பிடித்துள்ளது இந்த நிகழ்வு  பண்ருட்டியில் இடம் பெற்றுள்ளது.

 இதில்  கொளஞ்சியப்பன்,ஞானசேகரன்,ஆறுமுகம்,செல்வம்,ராஜா,கண்ணன், விஸ்வநாதன்,தாமரைக்கண்ணன்,சிவகுரு,ரவிச்சந்திரன்,ஜெயலலிதா,கண்ணன்,ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்பல்கலைவித்தகர் கவிபாரதி கிராமிய கலை குழு நிறுவனதலைவர் மாளிகைமேடு ப.பார்த்திபன் அவர்கள் நன்றியுரை கூறினார் மேலும் எண்ணற்ற பொதுமக்கள் மாணவ மாணவிகள் ஆகியோர்  கலை நிகழ்ச்சி கண்டு களித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A 21 arts event at one place World record attempt in Kadalore


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->