மகளை அழைக்கச் சென்ற தாய் - ராணுவ வீரர் வீட்டில் நடந்த அதிர்ச்சி.! - Seithipunal
Seithipunal


மகளை அழைக்கச் சென்ற தாய் - ராணுவ வீரர் வீட்டில் நடந்த அதிர்ச்சி.!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள பொன்நகர் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். ராணுவ வீரரான இவர் தற்போது காஷ்மீரில் வேலைபார்த்து வருகிறார். இவருடைய மனைவி மேனகா. இவர் தனது குழந்தைகளுடன் இங்கு உள்ள வீட்டில் வசித்து வருகிறார். 

இந்த நிலையில், மேனகா நேற்று இரவு இரண்டாவது குழந்தையை வீட்டில் தூங்க வைத்துவிட்டு டியூசனுக்கு சென்ற மூத்த மகளை அழைத்து வறுவதற்காக வீட்டை பூட்டாமல் சென்றுள்ளார்.

அப்போது வீட்டின் பின் பக்கம் வழியாக வந்த கொள்ளையர்கள் வீட்டிற்குள் புகுந்து அங்கிருந்த பீரோவை திறந்து அதிலிருந்த 15 பவுன் நகை மற்றும் ரூ.5 ஆயிரம் பணம் உள்ளிட்டவற்றை திருடி சென்றுள்ளனர். 

இதற்கிடையே வெளியில் சென்ற மேனகா வீட்டிற்குள் வந்த போது பீரோ திறக்கப்பட்டு துணிகள் கலைந்து கிடப்பதை கண்டு பதற்றமடைந்தார். உடனடியாக நகை இருந்த பகுதியை பார்த்த போது அங்கு நகைகள் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். 

உடனே, மேனகா இந்தச் சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் படி போலீஸார் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

jewles and money theft army man house in karaikudi


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->