அதிகாலையில் இருந்து தமிழகத்தில் அம்மாவின் முழக்கம்! எச்.ராஜா மற்றும் தமிழிசை வாழ்த்து! - Seithipunal
Seithipunal



தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர், அதிமுக-வின் முன்னாள் பொதுச் செயலாளருமான மறைந்த ஜெயலலிதா அவர்களுக்கு இன்று  71-வது  பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும்  அதிமுக-வினர் ஜெயலலிதாவின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

சென்னையில் அணைத்து தெருக்களிலும் ஜெயலலிதாவின் புகைப்படத்தை வைத்து, மாலை அணிவித்து எம்.ஜி.ஆர் நடித்த படங்களில் உள்ள பாட்டுகளையும், ஜெயலலிதாவை புகழ்ந்து பாடும் பாட்டுகளையும் ஒளிபரப்பிவருகின்றனர். இன்று அதிகாலையில் இருந்தே அம்மா அவர்களை புகழும் வகையிலான பாடல்களே அனைவரின் காதிலும் கேட்டு வருகின்றது.

திரைப்படத்தை தொடர்ந்து அரசியலில் எம்ஜிஆருக்கு அடுத்தபடியாக அரசியல் வாரிசாக வந்தவர் ஜெயலலிதா. இவர் தமிழகத்தில் 5முறை முதல்வராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 2016ம் ஆண்டு ஏற்பட்ட உடல்நலக் கோளாறு காராணமாக மருத்துவமனையில் தொடர் சிகிச்சை அவருக்கு அளிக்கப்பட்டு வந்தது. இருந்தும், சிகிச்சை பலனின்றி ஜெயலலிதா 05.12.2016 அன்று காலமானார். 

ஜெயலலிதாவின் இறப்பிற்கு அணைத்து கட்சியினரும் இரங்கல் தெரிவித்தனர். இந்தநிலையில் ஜெயலலிதாவின் பிறந்தநாளை தமிழகத்தில் உள்ள அணைத்து அதிமுகவினரும் கொண்டாடி வருகின்றனர். வருகின்ற  நாடாளுமன்ற தேர்தலில்  பாஜகவும், அதிமுகவும் கூட்டணியில் இணைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து பாஜக தலைவர்களும் தங்களின் புகழ் அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.




 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

jayalalitha birthday celebration


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->