இதான் முடிவு! எகிறி அடிக்கும் அதிமுக முன்னாள் அமைச்சர்! குழப்பத்தில் பாஜக!
Jayakumar say about ADMK vs BJP Issue
மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாதுரை குறித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறிய கருத்தால், அ.தி.மு.க - பாஜக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
இத்தனை உறுதி செய்யும் விதமாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பாஜகவுடன் அதிமுக கூட்டணியில் இல்லை என்று அறிவித்திருந்தார்.

மேலும், அண்ணாமலையை மாற்றினால் தான் கூட்டணி என்றும் டெல்லி தலைமைக்கு அதிமுக தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும், அதற்க்கு பாஜக தலைமை மறுத்து விட்டதாகவும் சொல்லப்படுகிறது.
இதற்கிடையே, அதிமுக-பாஜக கூட்டணியில் எந்த பிரச்னையும் இல்லை என்று முன்னாள் அமைச்சர் சொல்லுற ராஜு தெரிவித்தது, அதிமுக, பாஜகவினர் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதில் எந்த மாற்றமும் இல்லை என்று, அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் திட்டவட்டமாக மீண்டும் தெரிவித்துள்ளார்.
அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவிக்கையில், "மக்களின் பிரச்னைகளுக்காகவே மத்திய அமைச்சரை அதிமுக நிர்வாகிகள் சந்தித்துப் பேசினர்.

அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என்பதில் எந்த மாற்றமும் இல்லை. கடந்த 18ஆம் தேதி எடுத்த முடிவில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
நாளை நடக்கும் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும்" என்று ஜெயக்குமார் தெரிவித்தார்.
English Summary
Jayakumar say about ADMK vs BJP Issue