எழில்மிகு... ஜலகம்பாறை நீர்வீழ்ச்சி..! - Seithipunal
Seithipunal


வேலூரில் இருந்து 99கி.மீ தொலைவிலும், திருப்பத்தூரிலிருந்து 12கி.மீ தொலைவிலும், ஏலகிரியில் இருந்து ஏறத்தாழ 40கி.மீ தொலைவிலும் அமைந்துள்ள எழில்மிகு நீர்வீழ்ச்சிதான் ஜலகம்பாறை நீர்வீழ்ச்சி.

ஏலகிரி வழியாக பாயும் அத்தாறு ஆறு இங்கு நீர்வீழ்ச்சியாக பாய்கிறது. மலையின் பின்புறம் ஜலகம்பாறை நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது.

நிலவூரில் இருந்து மலை வழியாக பயணம் செய்தால் ஜலகம்பாறையை அடையலாம். அழகான வயல்களுடன் காட்சித்தரும் மலையில் இவ்வருவி அமைந்து சுற்றுலாப்பயணிகளை அதிகம் கவர்கிறது.

பறவை, விலங்குகளின் சத்தம்... அருவி தண்ணீரின் சலசலப்புச் சத்தம்... அருமையான அருவி நீர்... அழகான மரம், செடிகள்.... இவற்றை அனுபவிக்க சுற்றுலாப் பயணிகளுக்கான சிறந்த இடமென்றால் அது ஜலகம்பாறை நீர்வீழ்ச்சியாகத்தான் இருக்க வேண்டும்.



அருவியின் அருகில் லிங்க வடிவ முருகன் ஆலயம் உள்ளது. பருவ காலங்களில் இந்த நீர்வீழ்ச்சி சுற்றுலா பயணிகளுக்கு கண்கொள்ளாக் காட்சியாக விளங்குகிறது.

மூலிகை மரங்கள் அடர்ந்த காட்டின் நடுவே இந்த நீர்வீழ்ச்சி அமைந்துள்ளதால் இந்த நீர்வீழ்ச்சியில் குளிப்பது பல நோய்களை குணப்படுத்தும் என்று நம்பப்படுகிறது.

வருடத்தின் எல்லா நாட்களிலும் இங்கு சீரான சீதோஷ்ணநிலை நிலவுவதால் இது ஒரு கோடை வாசத் தலம் என்பதையும் தாண்டி அனைத்து நாட்களிலும் செல்லக்கூடிய ஒரு சிறந்த சுற்றுலாத்தலமாகும்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

jalagamparai waterfalls


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->