இந்தியா-பாகிஸ்தான் பேச்சுவார்த்தைக்கு ஆதரவளிக்க தயார்; இங்கிலாந்து உறுதி..! - Seithipunal
Seithipunal


பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்திய ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை நடத்தியுள்ளது. இது இரு நாடுகளுக்கிடையில் போர்ப்பதற்றத்தை தீவிரமாக்கியுள்ளது. இந்நிலையில், இந்தியாவின் இந்த சிந்தூர்  தாக்குதல் குறித்து உலக நாடுகளின் தலைவர்கள் தங்களது கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

இதுகுறித்து இங்கிலாந்து சார்பில் வர்த்தக செயலாளர் ஜோனாதன் ரெனால்ட்ஸ், கூறியிருப்பதாவது:-

இந்தியா மற்றும் பாகிஸ்தான் போர்ச்சூழல் நிலைமை மிகவும் கவலை அளிக்கிறது என்றும், பதற்றத்தை குறைப்பதற்கு இந்தியாவும், பாகிஸ்தானும் பேச்சுவார்த்தை நடத்த இங்கிலாந்து ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளார்.அத்துடன், நாங்கள் இரு நாடுகளுக்கும் (இந்தியா - பாகிஸ்தான்) நண்பர், கூட்டாளி என்பதே எங்கள் செய்தி. ஆதலால் இரு நாடுகளையும் ஆதரிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இரு நாடுகளும் பிராந்திய ஸ்திரத்தன்மை, உரையாடல், பதற்றத்தைக் குறைத்தல் ஆகியவற்றில் அதிக விருப்பம் கொண்டிருக்கிறது. எதுவானாலும் அதை ஆதரிக்க எங்களால் செய்யக்கூடிய எதையும் செய்யத் தயாராக இருக்கிறோம் என்று ஜோனாதன் ரெனால்ட்ஸ் மேலும் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

England says it is ready to support India and Pakistan talks


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->