கரூரில் மீண்டும் ரெய்டு.!! செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் ED அதிகாரிகள் சோதனை.!!
IT officials raid on Senthil Balaji's assistant house
அமைச்சர் செந்தில் பாலாஜியின் உதவியாளர் சங்கர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கரூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உதவியாளர் சங்கர் வீட்டில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோன்று கரூரில் உள்ள தனலட்சுமி மார்பில்ஸ் உரிமையாளர் வீடு, அலுவலகங்களிலும் அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.

மத்திய துணை ராணுவ படையினர் பாதுகாப்புடன் நான்கு இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. இன்று காலை 2 கார்களில் வந்த 10க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜியின் உதவியாளர் சங்கர் வீட்டில் ன சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
ஏற்கனவே அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார், செந்தில் பாலாஜியின் உறவினர்கள், நண்பர்கள் இல்லம் மற்றும் அலுவலகங்கள், அரசு ஒப்பந்ததாரர்கள் வீடு மற்றும் அலுவலகம் ஆகிய இடங்களில் கடந்த மே மாதம் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

இதற்கு முன் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்க துறையினர் சோதனை நடைபெற்ற நிலையில் தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜியின் உதவியாளர் சங்கர் இல்லம் மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
இதற்கு முன் நடைபெற்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையின் போது கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் சங்கர் இல்லத்தில் சோதனை நடைபெற்று வருவதாக தெரிய வருகிறது. நேற்று திமுக நிர்வாகி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்ற நிலையில் இன்று அமைச்சர் செந்தில் பாலாஜியின் உதவியாளர் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடைபெறுவது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
IT officials raid on Senthil Balaji's assistant house