நோபல் பரிசு பெற்ற திரு.ஜார்ஜ் பெர்னார்ட் ஷா அவர்கள் பிறந்ததினம்!
It is the birthday of Mr George Bernard Shaw the Nobel Prize winner
இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற திரு.ஜார்ஜ் பெர்னார்ட் ஷா அவர்கள் பிறந்ததினம்!.
ஜார்ஜ் பெர்னார்ட் ஷா (George Bernard Shaw சூலை 26,1856 - நவம்பர் 2, 1950), இவரது சுய வற்புறுத்தலின் பேரில் பெர்னார்ட் ஷா என்று அழைக்கப்படுகிறார். இவர் ஒரு ஐரிய நாடக ஆசிரியர், விமர்சகர், மதக் கோட்பாடுகளுக்கு எதிரானவர் மற்றும் அரசியல் ஆர்வலர் ஆவார். இவரது தாக்கம் மேற்கத்திய நாடகம், கலாச்சாரம் மற்றும் அரசியலில் 1880ஆம் ஆண்டில் இருந்து தற்போதுவரை நீடிக்கிறது.
மேன் அண்ட் சூப்பர்மேன் (1902), பிக்மேலியன் (1913) மற்றும் செயிண்ட் ஜோன் (1923) போன்ற பரவலாக அறியப்பட்ட படைப்புகள் உட்பட அறுபதுக்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதினார். சமகால நிகழ்வுகளை நையாண்டி செய்யும் விதம் மற்றும் வரலாற்று கருத்துருவகம் செய்தல் ஆகியவற்றில் அவரது காலத்தில் சிறந்து விளங்கினார். 1925இல் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றார்.

பன்மொழி புலவர்' திரு.மு.கு.ஜகந்நாதராஜா அவர்கள் பிறந்ததினம்!.
மொழிகளுக்கு இடையே அறிவைப் பரிமாறிய பன்மொழிப்புலவர் மு.கு.ஜகந்நாதராஜா 1933ஆம் ஆண்டு ஜூலை 26ஆம் தேதி விருதுநகர் மாவட்டத்திலுள்ள ராஜபாளையத்தில் பிறந்தார்.
தன் விடாமுயற்சியால் பல மொழிகளை கற்றுக்கொண்டார். பிறகு தமிழின் மேன்மைமிக்க இலக்கியங்களான திருக்குறள், புறநானூறு, குறிஞ்சிப்பாட்டு முதலியவற்றை தெலுங்கில் மொழிபெயர்த்தார்.
மன்னர் கிருஷ்ண தேவராயர் தெலுங்கில் இயற்றிய ஆமுக்த மால்யதா (சூடிக் கொடுத்தவள்) என்ற காவியத்தை 1988ஆம் ஆண்டு தமிழாக்கம் செய்தார். இது முதன் முதலில் தமிழில் மொழிபெயர்ப்பு விருது பெற்ற நூலாகும்.
முத்தொள்ளாயிரம், தமிழும் பிராகிருதமும், இந்திய மொழிகளின் ஒப்பிலக்கியம் (1994), திராவிட மொழிகளில் யாப்பியல் உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார்.
பல மொழிகளுக்கு இடையே மனித அறிவை விரிவுப்படுத்திய இவர் 2008ஆம் ஆண்டு டிசம்பர் 2 ஆம் தேதி அன்று மறைந்தார்.
English Summary
It is the birthday of Mr George Bernard Shaw the Nobel Prize winner