ஆதியோகி சிலை விவகாரம் | ஈஷா அறக்கட்டளை வெளியிட்ட முக்கிய தகவல்! - Seithipunal
Seithipunal


கோவையில் அமைக்கப்பட்டுள்ள ஆதியோகி சிலை தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் உரிய அனுமதிகளை பெற்றுள்ளதாக, ஈஷா அறக்கட்டளை விளக்கம் அளித்துள்ளது.

மேலும், சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்படி அதிகாரிகள் முன் அதை ஆவணங்கள் சமர்ப்பிப்போம் என்றும் ஈஷா அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

இதுகுறித்த ஈஷா அறக்கட்டளையின் விளக்க அறிக்கையில், "ஆதியோகி சிலைக்கான உரிய ஒப்புதல்கள் எங்களிடம் உள்ளது.

அதை எங்கேயும் எப்போதும் சமர்ப்பிக்க தயாராக உள்ளோம். ஆதியோகி சிலை தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் உரிய அனுமதிகளை பெற்றுள்ளோம். சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்படி அதிகாரிகள் முன் அதை சமர்ப்பிப்போம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கு விவரம் : "மலைவாழ் மக்களின் வாழ்வாதாரம், வன விலங்குகளின் வாழ்க்கை முறைக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் ஆதியோகி சிலை அமைக்கப்பட்டுள்ளதாக, பழங்குடியின பாதுகாப்பு சங்க தலைவர் முத்தம்மாள் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணையில், ஈஷா ஃபவுண்டேஷனுக்கு கட்டிடம் கட்ட அனுமதியோ, தடையில்லா சான்றோ பெறவில்லை. ஆவணங்கள் எதுவும் இல்லை என்று, அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், மனுதாரரும், ஈஷா அறக்கட்டளை தரப்பு ஆவணங்களை ஆய்வு செய்து, அனுமதியில்லை என்று தெரியவந்தால் உடனடியாக சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தவிட்டிருந்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

isha issue Chennai HC


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?
Seithipunal
--> -->