போதையின் உச்சத்தில் பேருந்து நிலையத்தில் மயங்கி கிடந்த ஜோடியால் பரபரப்பு...! - Seithipunal
Seithipunal


மதுபோதையில் பேருந்து நிலையத்தில் மயக்கமடைந்த ஜோடியால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் மாவட்டம், கரைப்புதூர் ஊராட்சி அல்லாளபுரம் பேருந்து நிறுத்ததில் 45 வயது மதிக்கத்தக்க ஆணும், சுமார் 30 வயது அமர்ந்திருந்தனர். திடீரென அவர்கள் பேருந்து நிலையத்திலே படுத்து விட்டனர்.

நீண்ட நேரமாகியும் அவர்கள் எழுததால் அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கதினர் அந்த பகுதியில் உள்ள இளைஞர்களிடம் இது குறித்து கூறியுள்ளனர். அந்த இளைஞர்கள் வந்து பார்க்கும் போது அந்த ஜோடி போதையில் இருந்தது தெரியவந்தது. உடனே அவர்கள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.

விரைந்து வந்த காவல்துறையினர் அவர்களிடம் விசாரித்தனர். ஆனால், அவர்கள் போதையில் சரிவர பதில் கூறவில்லை. இதனை அடுத்து, அவர்கள் மீது தண்ணீர் தெளித்த காவல்துறையினர் போதை தெளிந்த உடன் எச்சரித்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.             நடுதர வயதுள்ள ஜோடி மது போதையில் மயங்கி கிடந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Intoxicated couple lying unconscious at the bus stop


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->