சர்வதேச யோகா சாம்பியனஷிப் போட்டி..தங்கப்பதக்கம் வென்ற தமிழக மாணவி!
International Yoga Championship Tamil Nadu student wins gold medal
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக மாணவிகள் சர்வதேச யோகா சாம்பியனஷிப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக யோகா மைய மாணவிகள் சந்தியா மற்றும் ஹேமா ஆகியோர் 16, 17 நவம்பர். 2024 ஆகிய தேதிகளில் தெலுங்கானாவின் ஹைதராபாத்தில் நடைபெற்ற 2-வது தேசிய யோகாசன விளையாட்டு சாம்பியன்ஷிப் 2024-ல் பாரம்பரிய யோகாசனம், தனி யோகாசனம் மற்றும் ஆர்டிஸ்டிக் ஜோடி போன்றவற்றில் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்கள் பெற்றதன் வாயிலாக சர்வதேச யோகா போட்டியில் பங்கேற்க தகுதியடைந்தனர்.
இதன் தொடர்ச்சியாக முதல் சர்வதேச யோகா சாம்பியன்ஷிப் கலை மற்றும் கலாச்சார நிகழ்வு-2025 மலேசியா நாட்டின் கோலாலம்பூரில் உள்ள சர்வதேச இளைஞர் மையத்தில் 15 ஆகஸ்ட் 2025 அன்று நடைபெற்றது. இதில் மலேசியா, இலங்கை, சிங்கப்பூர் மற்றும் இந்தியாவிலிருந்து 250-க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்றனர்.
தர்மபுரியில் உள்ள கிருஷ் யோகா வித்யாலயா மூலம் அழகப்பா பல்கலைக்கழகத்தை பிரதிநிதித்துவப்படுத்தி, யோகா கல்வி மையத்தின் மாணவி சந்தியா, இளங்கலை யோகா மூன்றாம் ஆண்டு ஜே.ஹேமா முன்னாள் யோகா மாணவி ஆகியோர் கலந்துகொண்டு பொதுவான குழு, சாம்பியன் பிரிவு மற்றும் நீண்ட நேரம் நிலைநிறுத்தி வைத்திருக்கும் ஆசனங்களில் பங்கேற்றனர். இதில் அழகப்பா பல்கலைக்கழக மாணவி சந்தியா பொதுப்பிரிவில் தங்கப்பதக்கம் பெற்றார். 15 முதல் 25 வயது பொதுப்பிரிவில் இரண்டாவது இடத்தையும், சாம்பியன் ஆப் சாம்பியன் வெள்ளிப்பதக்கமும் வென்றார். மற்றொரு மாணவி ஜே.ஹேமா 15 முதல் 25 வயதுப் பொதுப்பிரிவில் 2வது இடத்தையும் சாம்பியன் ஆப் சாம்பியன்ஸில் தங்கப்பதக்கம், லாங் ஹோல்டிங்கில் 3வது இடத்தையும் வென்றார்.
மேலும் யோகா கல்வி மையத்தின் பேராசிரியை மற்றும் ஒருங்கிணைப்பாளருமான முனைவர்.சரோஜா, நீண்ட நேரம் ஆசனம் (புஜாங்காசனம் 10 நிமிடம் ) நிலையை நிலைநிறுத்திப் பிடிக்கும் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார். சர்வதேச யோகா சாம்பியனஷிப் போட்டியில் நடுவர் குழு உறுப்பினராகவும் செயல்பட்டு "யோகா ரத்னா” விருதையும் பெற்றுள்ளர். பரிசுபெற்றவர்களை அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் பேரா.க.ரவி நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
English Summary
International Yoga Championship Tamil Nadu student wins gold medal