ஆபத்தில் முடிந்த செல்பி மோகம்.. 500 அடி பள்ளத்தில் வீழ்ந்த இளைஞரை தேடும் பணி தீவிரம்..!
Intensity of the task of looking for the youth who fell into the 500 abyss
ரெட்ராக் பகுதியில் செல்பி எடுக்க சென்ற போது தவறி விழுந்த இளைஞரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு 8 நபர்கள் கொண்ட இளைஞர் குழுவினர் சுற்றுலாவிற்கு வந்தனர். அப்போது, அந்த இளைஞர் குழுவினர் ரெட்ராக் பகுதிக்கு செல்பி எடுக்க சென்றுள்ளனர். அந்த பக்திக்கு சென்ற இளைஞர்கள் அங்கு மது அருந்தியுள்ளனர்.
அதன் பின், மலைமுகட்டில் செல்பி எடுக்க சென்றுள்ளனர். அப்போது அந்த குழுவை சேர்ந்த ராம்குமார் என்ற இளைஞர் பள்ளத்தில் வீழ்ந்துள்ளார். இதனை அடுத்து, காவல்துறைக்கு தகவலளித்தனர். பனிமூட்டம் நிலவியதால் மாயமான இளைஞரை தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது.

அதனை தொடர்ந்து இன்று காலை முதல் மாயமான இளைஞரை டிரோன் கேமரா மூலம் தேடி வருகின்றனர். மேலும், தீயணைப்புதுறையினர் குழுவாக இணைந்து தேடும் பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
மாயமான இளைஞரை தேடும் பணியில் டிரோன் கேமரா மூலம் சுமார் 1000 அடி வரை பள்ளத்தாக்கு வரை கண்காணித்து தேடி வருகின்றனர். அடர் மேகமூட்டம் இருப்பதால் தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
English Summary
Intensity of the task of looking for the youth who fell into the 500 abyss