அடுத்தடுத்து அதிர்ச்சி : சப்பாத்தியில் ஊர்ந்து சென்ற பூச்சி - அதிகாரிகள் போட்ட அதிரடி உத்தரவு.! - Seithipunal
Seithipunal


அடுத்தடுத்து அதிர்ச்சி : சப்பாத்தியில் ஊர்ந்து சென்ற பூச்சி - அதிகாரிகள் போட்ட அதிரடி உத்தரவு.!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள திருநகர் காலனி பகுதியை சேர்ந்தவர் ஜீவானந்தம். துரித உணவகம் நடத்தி வரும் இவருடைய மனைவி பிரசவத்திற்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் ஜீவானந்தம், மருத்துவமனையில் இருக்கும் மனைவி மற்றும் தாயாருக்கு பெருந்துறை ரோட்டில் உள்ள ஒரு ஓட்டலில் மூன்று சப்பாத்தி பார்சல் வாங்கி வந்துள்ளார். 

இதையடுத்து ஜீவனந்தத்தின் மனைவி அந்த பார்சலை பிரித்து சாப்பிட முயன்றபோது சப்பாத்தியில் இருந்து பூச்சி ஒன்று ஊர்ந்து சென்றுள்ளது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அதன் பின்னர் ஜீவானந்தம், உறவினர்களுடன் சம்பந்தப்பட்ட ஓட்டலுக்கு சென்று சம்பவம் தொடர்பாக கேட்டுள்ளார். 

அப்போது ஓட்டல் நிர்வாகத்தினர் அவரை சமாதானப்படுத்த முயற்சி செய்துள்ளனர். இருப்பினும், ஜீவானந்தம் சம்பவம் குறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளிடம் புகார் செய்தார்.

அதுமட்டுமல்லாமல், சப்பாத்தியில் பூச்சி ஊர்ந்து சென்றதை தனது செல்போனில் வீடியோ எடுத்து அதனை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார். இந்த நிலையில், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நேற்று மதியம் சம்பந்தப்பட்ட ஓட்டலில் சோதனை நடத்தினர்.

அதில், ஓட்டலின் சமையல் அறை சரிவர பராமரிக்கப்படாமலும், போதுமான சுகாதாரம் இல்லாமலும் இருப்பது தெரியவந்தது. உடனே அதிகாரிகள் ஓட்டலை மூட உத்தரவிட்டடு, குறைகளை நிவர்த்தி செய்த பிறகு உரிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டு பின்னர் ஓட்டல் திறக்க அனுமதி வழங்கப்படும்" என்று தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் ஈரோட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சமீபத்தில் சவர்மா சாப்பிட்டு சிறுமி உயிரிழந்த சம்பவம் குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

insects crawling on chapatti in erode hotel


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->